menu-iconlogo
logo

Vandhaai Ayya (From "Baahubali 2 - The Conclusion")

logo
Lời Bài Hát
மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே

தர்மம் தோற்க்காதே ஆளும் காவலனே

மேற்கே ஏற்காதே வீழும் சூரியனே

தர்மம் தோற்க்காதே ஆளும் காவலனே

கசிந்திடும் கண்ணீரை திரும்பிடச் செய்யய்யா

வரண்டிடும் நெஞ்சத்தில் மழையெனப் பெய்யய்யா

ஆழ் மனதினில் சூழும் இருளை, நீளும் துயரை, பாழும் விதியை நீக்கும் தீயே நீயய்யா

வந்தாய் அய்யா வந்தாய் அய்யா

வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா

வந்தாய் அய்யா வந்தாய் அய்யா

வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா

நீ வீற்றிடும் தோரனையாலே பாறைகளும் அரியாசனமாய்

உன் பேரை தம்மில் தாமே செதுக்கிடும் கல்வெட்டாய்

காற்றோடு உன் குரல் கேட்டால் பொட்டல் காடும் அரசபையாய்

உன் வேர்வை ஒரு துளி பட்டால் ஒளிருது நெல் பட்டாய்

உன் சொல்லே சட்டம் அய்யா

உன் பார்வை சாசனமய்யா

என் சிந்தை நீயே, எந்தை நீயே, சேயும் நீயே

எங்கள் ஆயுள் நீ கொள்ளைய்யா

வந்தாய் அய்யா வந்தாய் அய்யா

வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா

வந்தாய் அய்யா வந்தாய் அய்யா

வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா