menu-iconlogo
huatong
huatong
avatar

Engengu Nee Sendra

K.J.Yesudas/K. S. Chithrahuatong
monksmommy333huatong
Lời Bài Hát
Bản Ghi
எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

கண்களின் பார்வை

அம்புகள் போலே

நெஞ்சினிலே பாய்வதுமேன்

அம்புகள் மீண்டும்

பாய்ந்திடும் போது

காயங்களும் ஆறியதேன்

ஆறிடும் நெஞ்சம்

தேறிடும் நேரம்

பிரிந்தது ஏனோ உன் உறவு

நெருங்கிடும் போதும்

நீங்கிடும் போதும்

மயங்குவதேனோ என் மனது

இரு நெஞ்சின் துன்பம்

இது காதல் தான்

அது போல இன்பம்

எது கண்மணி

பூங்காற்று தாலாட்டும்

அன்பே அன்பே..

எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

ஆனந்த கீதம் ஆரம்பாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

மாலை நன்நேரம்

மாறிட வேண்டாம்

மாங்குயிலே மாங்குயிலே

காலங்கள் கூட மாறிட வேண்டாம்

கண்மணியே கண்மணியே

சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்

சந்திரன் அங்கே வந்திடட்டும்

மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்

கடலினில் கூட அலை நிற்கட்டும்

உன்னோடு சேரும் ஒரு நேரமே

என்றென்றும் இங்கே நிலையாகட்டும்

பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

லாலால லாலால லா லா

லாலால லாலால லா லா

Nhiều Hơn Từ K.J.Yesudas/K. S. Chithra

Xem tất cảlogo