தானந்தன கும்மி கொட்டி 
கும்மி கொட்டி கும்மி கொட்டி 
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே 
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே 
பூக்கோலம் இளமான் போட 
புது மாக்கோலம் விழி மீன் போட 
அடியம்மா முத்து முத்தா 
சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா 
சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி 
கும்மி கொட்டி கும்மி கொட்டி 
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே 
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே 
 தானாக பொண்ணுக சிக்கும் 
மச்சினன் கை ராசி 
அத நான் பாத்தேன் கண்ணுல சிக்கி 
அப்படி உன் ராசி 
சிறுவாணி கெண்டையப் போல 
மின்னுது கண் ராசி 
ஹா ஹா ஹா 
நீ சிரிச்சாக்கா சில்லர கொட்டும் 
உத்தமி உன் ராசி 
நான் வாங்கிடும் உள் மூச்சிலே 
நீ சேரவே சூடாச்சுதே 
வஞ்சி மனம் பூத்தாட கெஞ்சி தினம் கூத்தாட 
ஒண்ணுக்குள்ள ஒண்ணு வந்து 
உன்னுயிரோட ஒட்டுதையா 
தானந்தன கும்மி கொட்டி 
கும்மி கொட்டி கும்மி கொட்டி 
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே 
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே 
பூக்கோலம் இளமான் போட 
புது மாக்கோலம் விழி மீன் போட 
அடியம்மா முத்து முத்தா 
சுகம் கொஞ்சுது கொஞ்சுதம்மா 
சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி 
கும்மி கொட்டி கும்மி கொட்டி 
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே 
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே 
 ஆத்தாடி தஞ்சாவூரு சொக்குற நெல் ஆத்தோ 
அட கூத்தாடும் வைகை ஆறு 
பாடுற என் பாட்டோ 
தேரோடும் தென் மதுரை 
சன்னிதி கொண்டவனோ 
அந்த ஊராண்ட உத்தமனின் 
சந்ததி வந்தவனோ 
உனை ஆள்வதே பெரும் பாடம்மா 
ஊராள்வதே எனக்கேனம்மா 
நெஞ்சத்திலே நீ ஆள மஞ்சத்திலே நான் ஆள 
காதலெனும் ஆட்சி தனை 
வானமும் கூட வாழ்த்துதம்மா 
தானந்தன கும்மி கொட்டி 
கும்மி கொட்டி கும்மி கொட்டி 
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே 
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே 
பூக்கோலம் இளமான் போட 
புது மாக்கோலம் விழி மீன் போட 
அடியம்மா முத்து முத்தா 
சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா 
சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி 
கும்மி கொட்டி கும்மி கொட்டி 
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே 
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே