menu-iconlogo
huatong
huatong
avatar

Oru Thadavai Solvaya (ROMALD)

ROMALDhuatong
🔥👊ROMALD🍎🇮🇳🎙️huatong
Lời Bài Hát
Bản Ghi
பாடகி : சின்மயி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

பெண் : ஒரு தடவை

சொல்வாயா உன்னை

எனக்கு பிடிக்கும் என்று

ஒரு பாா்வை பாா்ப்பாயா

உன்னை எனக்கு பிடிக்கும் என்று

பெண் : காதல் ஒரு புகையை

போல மறைத்து வைத்தால்

தொிந்து விடும் காதலில் தான்

பூக்கள் மோதி மலைகள் கூட

உடைந்து விடும் உன்னை

ஒளிக்காதே என்னை வதைக்காதே

என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

ஆண் : நதியில் தொியும்

நிலவின் உருவம்

நதிக்கு சொந்தமில்லை

நினைப்பதெல்லாம் நடக்கும்

வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை

பெண் : உனக்கும் எனக்கும்

விழுந்த முடிச்சு தானாய்

விழுந்ததில்லை உலக

உருண்டை உடையும் போதும்

காதல் உடைவதில்லை

ஆண் : மின்மினி தேசத்து

சொந்தக்காரன் விண்மீன்

கேட்பது தவறாகும்

பெண் : வரலாற்றில் வாழ்கின்ற

காதல் எல்லாம் வலியோடு

போராடும் காதல் தானே

பெண் : ஒரு தடவை

சொல்வாயா உன்னை

எனக்கு பிடிக்கும் என்று

ஒரு பாா்வை பாா்ப்பாயா

உன்னை எனக்கு பிடிக்கும் என்று

ஆண் : நெருங்க நினைக்கும்

நினைவை மறக்க நெஞ்சம்

நினைக்கிறது கனவில் பூக்கும்

பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது

பெண் : கிளையை முறித்து

போட்டு விடலாம் வேரை

என்ன செய்வாய் தரையை

உடைத்து முளைக்கும் போது

அன்பே எங்கு செல்வாய்

ஆண் : மல்லிகை பூக்கள்

உதிா்வதெல்லாம் மரத்தடி

நிழலுக்கு சொந்தமில்லை

பெண் : உன்னோடு நான்

வாழ போராடுவேன் நீ இன்றி

போனாலும் தள்ளாடுவேன்

பெண் : ஒரு தடவை

சொல்வாயா உன்னை

எனக்கு பிடிக்கும் என்று

ஒரு பாா்வை பாா்ப்பாயா

உன்னை எனக்கு பிடிக்கும் என்று

பெண் : காதல் ஒரு புகையை

போல மறைத்து வைத்தால்

தொிந்து விடும் காதலில் தான்

பூக்கள் மோதி மலைகள் கூட

உடைந்து விடும் உன்னை

ஒளிக்காதே என்னை வதைக்காதே

என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

Nhiều Hơn Từ ROMALD

Xem tất cảlogo