menu-iconlogo
logo

Naan Paadum Mouna Raagam

logo
Lời Bài Hát
நான் பாடும் மௌன ராகம்

என் காதல் ராணி இன்னும்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னை காண வெண்ணிலா வந்து போனதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இன்று பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்கள்என்னும்சோலையில்காதல் வாங்கிவந்தேன்

வாங்கி வந்தபின்புதான் சாபம்என்று கண்டேன்

என் சாபம் தீரவே யோகம் இல்லையே

என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனதுகாம்பு இங்கு வாடுது

காலம் என்னைக் கேள்வி கேட்குது

கேள்வி இன்று கேலியாகிப் போனது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்.

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

Naan Paadum Mouna Raagam của S. P. Balasubrahmanyam/Mani Ratnam - Lời bài hát & Các bản Cover