menu-iconlogo
huatong
huatong
Lời Bài Hát
Bản Ghi
பெண் : ஆ...ஆ…..ஆ…..

பெண் : மௌனமான நேரம்...

மௌனமான நேரம்

இள மனதில் என்ன பாரம்

இது மௌனமான நேரம்

இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்

இதழில் மௌனங்கள்

மனதில் ஓசைகள்

இதழில் மௌனங்கள்

ஏன் என்று கேளுங்கள்

இது மௌனமான நேரம்

இள மனதில் என்ன பாரம்

ஆண்: இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ

புலம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ

பெண்: குளிக்கும் ஓர் கிளி ..

கொதிக்கும் நீர்த்துளி..

குளிக்கும் ஓர் கிளி ..

கொதிக்கும் நீர்த்துளி..

ஆண்: ஊதலான மார்கழி... நீளமான ராத்திரி

பெண்: நீ வந்து ஆதரி…

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

பெண் : இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ

கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ

ஆண்: பாதை தேடியே பாதம் போகுமோ

பாதை தேடியே பாதம் போகுமோ

பெண் : காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ

ஆண் : தனிமையோடு பேசுமோ…

மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்

(சிரிப்புடன்) இது மௌனமான

நேரம் இளமனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள் (பெ: ஆ.ஆ.overlap)

இதழில் மௌனங்கள்

மனதில் ஓசைகள் (பெ: ஆ.ஆ.overlap)

இதழில் மௌனங்கள்

ஏனென்று கேளுங்கள்…

பெண் : இது மௌனமான நேரம்

இளமனதில் என்ன பாரம் (ஆ:ம்ம்ம்..overlap )

Nhiều Hơn Từ S. P. Balasubrahmanyam/S. Janaki

Xem tất cảlogo