menu-iconlogo
logo

Roja Ondru Mutham Ketkum

logo
Lời Bài Hát
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

மயக்கத்தில் தோய்ந்து

மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

தங்க மேனி தழுவும்

பட்டுச்சேலை நழுவும்

தென்றல் வந்து விளக்கும்

அது உங்களோடு பழக்கம்

சொர்க்கம் எங்கே என்றே தேடி

வாசல் வந்தேன் மூடாதே

மேளம் கேட்கும் காலம் வந்தால்

சொர்க்கம் உண்டு வாடாதே

அல்லிப்பூவின் மகளே

கன்னித்தேனை தா...ஹோ

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

மயக்கத்தில் தோய்ந்து

மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

வெண்ணிலாவில் விருந்து

அங்கு போவோம் பறந்து

விண்ணின் மீனை தொடுத்து

சேலையாக உடுத்து

தேகம் கொஞ்சம் நோகும் என்று

பூக்கள் எல்லாம் பாய் போட

நம்மை பார்த்து காமன் தேசம்

ஜன்னல் சாத்தி வாயூற

கன்னிக்கோயில் திறந்து

பூஜை செய்ய வா...ஹோய்

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

மயக்கத்தில் தோய்ந்து

மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

Roja Ondru Mutham Ketkum của S. P. Balasubrahmanyam/S. Janaki - Lời bài hát & Các bản Cover