menu-iconlogo
logo

Unn Perai Sollum Pothe

logo
Lời Bài Hát
உன் பேரை சொல்லும் போதே

உள் நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்

நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…

உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …

நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…

நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …

உன் பேரை சொல்லும் போதே

உள் நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்

நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…

நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …

நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்

கண் பார்க்கும் போதே

பார்வையாலே கடத்தி சென்றாய்

நான் பெண்ணாக பிறந்ததற்கு

அர்த்தம் சொன்னாய்

முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

என் உலகம் தனிமை காடு,

நீ வந்தாய் பூக்களோடு

என்னை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே …

நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…

நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …

உன் பேரை சொல்லும் போதே

உள் நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்

நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…

உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …

நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…

நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …

உன் கருங்கூந்தல்

குழலாகதான் எண்ணம் தோன்றும்

உன் காதோரம் உரையாடிதான் ஜென்மம் தீரும்

உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்

என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்

உன் காதல் ஒன்றை தவிர,

என் கையில் ஒன்றும் இல்லை

அதை தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே

நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…

நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …

உன் பேரை சொல்லும் போதே

உள் நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்

நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…

உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …

நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…

நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

Unn Perai Sollum Pothe của Shreya Ghoshal/Naresh Iyer - Lời bài hát & Các bản Cover