menu-iconlogo
huatong
huatong
avatar

Maanguyile Poonguyile

SP Balasubramaniamhuatong
Prakash 31huatong
Lời Bài Hát
Bản Ghi
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன

மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன

மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன

மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத

தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு

பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ

கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு

கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா

பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா

தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா

ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து

சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து

முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு

நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன

மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா

கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்

வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா

இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி

கூடியிருப்போம் கூண்டுக் கிளியே

கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே

ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்

சம்மதமுன்னு சொல்லு கிளியே

சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்

கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன்

சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு

முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன

மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன

மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன

மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஹோய

Nhiều Hơn Từ SP Balasubramaniam

Xem tất cảlogo