menu-iconlogo
logo

Mannanalum Thiruchenduril Mannaven-

logo
Lời Bài Hát
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்

கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன்

அருளால் பூவாவேன்.. நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்

பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்

பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்

தமிழ்ப் பேச்சானாலும்

திருப்புகழ் விளக்க பேச்சாவேன்

தமிழ்ப் பேச்சானாலும்

திருப்புகழ் விளக்க பேச்சாவேன்

மனம் பித்தானாலும் முருகன்

அருளால் முத்தாவேன்...நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன

சொல்லானாலும் ஓம்என்றொலிக்கும் சொல்லாவேன்

பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்

சொல்லானாலும் ஓம்என்றொலிக்கும் சொல்லாவேன்

பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்

அருள் உண்டானாலும் வீடும்

பெயரும் உண்டாவேன்

அருள் உண்டானாலும் வீடும்

பெயரும் உண்டாவேன்

தனி உயிரானாலும் முருகன்

அருளால் பயிராவேன்..நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்

கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன்

அருளால் பூவாவேன்..நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

முருகா.....முருகா.....முருகா..

Mannanalum Thiruchenduril Mannaven- của T. M. Soundararajan - Lời bài hát & Các bản Cover