menu-iconlogo
huatong
huatong
avatar

Muthukkalo Kangal

TMS/P.Susheelahuatong
photography_by_laurehuatong
Lời Bài Hát
Bản Ghi
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே

இல்லை தந்துவிட்டேன் என்னை

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே

இல்லை தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள்

பார்க்கும் பார்வை என்ன

பாலில் ஊறிய ஜாதிப் பூவை

சூடத் துடிப்பதென்ன?

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே

இல்லை தந்து விட்டேன் என்னை

கன்னிப் பெண்ணை மெல்ல

மெல்ல தென்றல் தாலாட்ட

கன்னிப் பெண்ணை மெல்ல

மெல்ல தென்றல் தாலாட்ட

கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட

எழுந்த இன்பம் என்ன என்

எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன

விருந்து கேட்பதென்ன அதையும்

விரைந்து கேட்பதென்ன?

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே

இல்லை தந்துவிட்டேன் என்னை

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம்

பின்னிப் பார்ப்பதென்ன?

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம்

பின்னிப் பார்ப்பதென்ன?

அருகில் நடந்து மடியில்

விழுந்து ஆடக் கேட்பதென்ன

மலர்ந்த காதல் என்ன உன்

கைகள் மாலையாவதென்ன?

வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே

இல்லை தந்து விட்டேன் என்னை

வானின் நீளம் வாழும் கண்ணில்

காதல் வழிந்தோட

வானின் நீளம் வாழும் கண்ணில்

காதல் வழிந்தோட

வளர்ந்து கடந்து சாரல் பொழிந்து

காற்றில் தவழ்ந்தாட

நிறத்தின் கூடல் என்ன உன் கன்னம்

அடைந்த வண்ணம் என்ன

இன்று பூசிய மஞ்சள் மீறி

கொதித்து சிவந்ததென்ன

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

Nhiều Hơn Từ TMS/P.Susheela

Xem tất cảlogo