பாடல் : கல்யாணமாம் கல்யாணம்
படம் : தரிசனம்
இசை : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
குரல் : டிஎம்எஸ், சுசீலா
பதிவேற்றம் :
கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணம்
கருத்த கூந்தல் நரைத்த பின்னும்
காதல் பேசும் நாலு கண்கள்
கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணம்
பதிவேற்றம் :
அறுபதான வயசில் கூட
அப்பா உடம்பு எப்படி
உங்க அப்பா உடம்பு எப்படி
அந்த கால உடம்பில்லையா
அமைஞ்சிருக்குது இப்படி
அந்த கால உடம்பில்லையா
அமைஞ்சிருக்குது இப்படி
இருபதான வயசில் கூட
ஏங்க நீங்க இப்படி
இருபதான வயசில் கூட
ஏங்க நீங்க இப்படி
ஏண்டி அந்த ரகசியத்த
வெளியில் சொன்னே தப்புடி
ஏண்டி அந்த ரகசியத்த
வெளியில் சொன்னே தப்புடி
கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணம்
பதிவேற்றம் :
ஏங்க இந்த இருவருக்கும்
வயசு தெரியல்லே
இளமையான ரகசியந்தான்
எனக்கு புரியல்லே
நான் சொல்லட்டுமா
சொல்லேன்
கணக்கு வச்சு அளவு வச்சு
பிள்ளையை பெத்தாங்க
அவங்க கணக்கு வச்சு அளவு வச்சு
பிள்ளையை பெத்தாங்க
காலம் பார்த்து உற்பத்திக்கு
தடை விதிச்சாங்க
கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணம்
பதிவேற்றம் :
அம்மா போலே எனக்கு கூட
அழகு வேணாமா
என்ன சும்மா நீங்க சுத்தி வந்தா
இளமை தங்குமா
இப்போ விட்டா எப்போ வாழவ
பார்க்க போறேண்டி
நீ இரக்கம் வச்சு இப்போ மட்டும்
அட்வைஸ் கேளேன்டீ
சொல்லு அட்வைஸ் கேளேன்டீ
அந்த கால புருஷன் மனைவி
ரகசிய பேச்சு
அதை அடுத்தவங்க பார்த்துவிட்டா
கௌரவம் போச்சு
இந்த கால குடும்பத்துக்கு
ரகசியம் ஏது
லைட்ட எரிய விட்டு பேசினால் தான்
கௌரவம் ஆச்சு ஓஹோ..
கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணம்
பதிவேற்றம் :
எட்டு பிள்ளை பெத்தால்
கூட லாபமாகலாம்
அந்த எட்டாவது பிள்ளை
கூட மேதையாகலாம்
எட்டாவது மேதைக்காக
கர்ப்பம் தங்கினால்
ஏழு முட்டாள்களை காலம் தோறும்
வீடு தாங்குமா
ஆஹா.. காதலுக்கு உடம்பிற்கு
ஆடி முடிப்போம்
அந்த கர்ப்பத்துக்கு மட்டும்
நாம கதவை சாத்துவோம்
அந்த கர்ப்பத்துக்கு மட்டும்
நாம கதவை சாத்துவோம்
ஆசைக்கொரு பெண்ணை
பெற்று காத்து கிடந்தோம்
நாம ஆஸ்திக்கொரு பிள்ளை
பெற்று சேர்த்து வளர்த்தோம் ஓஹோ..
கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணம்
கருத்த கூந்தல் நரைத்த பின்னும்
காதல் பேசும் நாலு கண்கள்
கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்.. யா.. ணம்
பதிவேற்றம்: