Movie: Kanchi Thalaivan
Singers: TMS, P.Suseela
Music: K.V.Mahadevan
RaagaDeepam Uploads
First Time In (16 06 2019)
ஆண்: வானத்தில் வருவது ஒரு நிலவு
இளம் வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு
இளம் வயதினில் வருவது ஒரு நினைவு
பெண்: வானத்தில் வருவது ஒரு நிலவு
இளம் வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு
இளம் வயதினில் வருவது ஒரு நினைவு
RaagaDeepam Uploads
ஆண்: நாணத்தில் பெண்ணுக்கு அழகு வரும்
அதை நாடி வந்தால் புது உலகு வரும்
நாணத்தில் பெண்ணுக்கு அழகு வரும்
அதை நாடி வந்தால் புது உலகு வரும்
பெண்: நானென்ற தனிமை அடங்கிவிடும்
அங்கு நாமென்ற இனிமை தொடங்கிவிடும்
நானென்ற தனிமை அடங்கிவிடும்
அங்கு நாமென்ற இனிமை தொடங்கிவிடும்
ஆண்: வானத்தில் வருவது ஒரு நிலவு
பெண்: இளம் வயதினில் வருவது ஒரு நினைவு
RaagaDeepam Uploads
First Time In (16 06 2019)
ஆண்: மாந்தளிர் மெல்லிடை ஆடி வரும்
அதை ஏந்திடக் கைகள் தாவி வரும்
மாந்தளிர் மெல்லிடை ஆடி வரும்
அதை ஏந்திடக் கைகள் தாவி வரும்
பெண்: தீங்கனி இதழில் கதை வளரும்
தீங்கனி இதழில் கதை வளரும்
கண்கள் தேடிய சுகத்தில் அமைதி பெறும்
கண்கள் தேடிய சுகத்தில் அமைதி பெறும்
ஆண்: வானத்தில் வருவது ஒரு நிலவு
பெண்: இளம் வயதினில் வருவது ஒரு நினைவு
RaagaDeepam Uploads
ஆண்: கோடையும் குளிராய் மாறி வரும்
அதில் கோ..டி இன்பம் ஊறி வரும்
கோடையும் குளிராய் மாறி வரும்
அதில் கோடி இன்பம் ஊ..றி வரும்
பெண்: மண மேடையில் திருநாள்
மலர்ந்து வரும் அதில்
மோகன வாழ்வு கனிந்து வரும்
மேடையில் திருநாள் மலர்ந்து வரும்
அதில் மோகன வாழ்வு கனிந்து வரும்
ஆண்: வானத்தில் வருவது ஒரு நிலவு
பெண்: இளம் வயதினில் வருவது ஒரு நினைவு
இருவர்: வானத்தில் வருவது ஒரு நிலவு
இளம் வயதினில் வருவது ஒரு நினைவு
RaagaDeepam Uploads
First Time In (16 06 2019)