menu-iconlogo
logo

Enakenna Yerkanavey (Short Ver.)

logo
Lời Bài Hát
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ

இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ

ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

அது ஏன்னென்று அறியேனடி (2)

ஓர பார்வை பார்க்கும் போது உயிரில் பாதி இல்லை

மீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை

எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்

அதை இன்று தான் கண்டு பிடித்தேன்

கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி

உன் கண்களை கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி

காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது

அது காலத்தை தட்டுகின்றது

என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது (2)

(எனக்கென ஏற்கனவே ...)

மார்பிற்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே

மனசையும் மறைக்காதே என் வயதையும் வதைக்காதே

புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடி

என் புன்னகையாலே ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி

வார்த்தை என்னை கை விடும் போது மௌனம் பேசுகிறேன்

என் கண்ணீர் பேசுகிறேன்

எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை (2)

(எனக்கென ஏற்கனவே ...)

Enakenna Yerkanavey (Short Ver.) của Unnikrishnan/Harini - Lời bài hát & Các bản Cover