menu-iconlogo
huatong
huatong
avatar

MAANIKKA VEENAI ENDHUM மாணிக்க வீணை

பி.சுசீலாhuatong
mike.irvinhuatong
歌词
作品

மாணிக்கவீணை ஏந்தும்

மாதேவி கலைவாணி

தேன்தமிழ் சொல்லெடுத்து

பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

அருள்வாய் நீ

இசை.. தருவாய் நீ

இங்கு வருவாய் நீ

லயம் தரும் வேணி

அம்மாஆஆஆ

மாணிக்க வீணை ஏந்தும்

மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து

பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால்

ஞானம் வளர்ப்பாய்

பூமணக்க பூஜை செய்தால்

பூ....வை நீ மகிழ்வாய்

மாணிக்க வீணை ஏந்தும்

மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து

பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில்

வீற்றிருப்பாய்

எங்கள் உள்ளக் கோவிலிலே

உறைந்து நிற்பாய்

வெள்ளைத் தாமரையில்

வீற்றிருப்பாய்

எங்கள் உள்ளக் கோவிலிலே

உறைந்து நிற்பாய்

கள்ளமில்லாமல் தொழும்

அன்பருக்கே என்றும்

அள்ளி அறிவைத் தரும்

அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி

பாரதி வாகதீஸ்வரி மாலினி

காணும் பொருளில்

தோன்றும் கலைமணி

வேண்டும் வரம்தரும் வேணி

நான்முகன் நாயகி

மோகனரூபிணி

நான்மறை போற்றும்

தேவி நீ

வானவர்க்கமுதே

தேனருள் சிந்தும்

கான மனோகரி

கல்யாணி

அருள்வாய் நீ

இசை தருவாய் நீ

இங்கு வருவாய் நீ

லயம் தரும் வேணி

அம்மாஆஆஆ

மாணிக்க வீணை ஏந்தும்

மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து

பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்…

அம்மா பாட வந்தோம்…

更多பி.சுசீலா热歌

查看全部logo