செல்லக் கிளியே
கை சேருமடி
ஹே, ராசா மக
ஹே, ராசா மக
என் செல்லமே, ஓ என் செல்லமே
உனை காணவே உயிர் தாங்கினேன்
விதி ஆனதே பிழை ஆனதே
மனதோடு தான் விளையாடுதே
உன் அருகில் நான் இருந்தும் உன்னை நெருங்க முடியாமல்
வழி இன்றி தவிக்கின்றேன் நான் கண்ணே
உன்னை காணும் வரம் கிடைத்தும் உடன் சேர முடியாமல்
காற்றாடும் மரமாகிறேன்
உன் அருகில் நான் இருந்தும் உன்னை நெருங்க முடியாமல்
வழி இன்றி தவிக்கின்றேன் நான் கண்ணே
உன்னை காணும் வரம் கிடைத்தும் உடன் சேர முடியாமல்
காற்றாடும் மரமாகிறேன்
என் செல்லக் கிளி
நான் செல்லும் வழி நீ இல்லாமலே போகுதே
என் பாசக் கிளி
நான் போகும் வழி தீர்வு இல்லாமல் போகுதே
ஏலா எலே ஏலா எலே ஏலேலே ஏலேலே ஏலா எலே (ராசா மக)
ஏலா எலே ஏலா எலே ஏலேலே ஏலேலே எலே
ஏலா எலே ஏலா எலே ஏலேலே ஏலேலே ஏலா எலே (ராசா மக)
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹோஹ்
வார்த்தைகள் போதுமே
பாதி துன்பம் போகுமே
ஆயினும் யாருமே பேசவில்லையே
அருகில் இருந்தும் இருவேறு துருவம் ஏன் இந்த சோகக் கதை?
மனதின் வலிகள் வெளிகாட்டிடாமல் தெளிவின்றி வாழும் நிலை
உதிராத விதையோடு மழை நீரும் உறவாடி மணலோடு செடியாகுமா?
சரியோ தவறோ இனி நாம் எவரோ மௌனங்கள் பதிலாகுமா?
என் ராசத்தியே
கை சேராமலே நாள் எல்லாமுமே போகுதே
நீ பேசாமலும் நான் சொல்லாமலும்
நாள் போகின்றதே காதலே
ஓயாமலே, ஓயாமலே என் எண்ணம் என் பேச்சு கேக்காமலே
இப்போதுபோல் எப்போதுமே என் பேச்சு கேக்காமலே
ஓயாமலே ஓயாமலே என் எண்ணம் என் பேச்சு கேக்காமலே (ராசா மக)
தனிமை இனிமேல் வலிகள் இனிமேல் போகாது மாறாமலே