menu-iconlogo
huatong
huatong
avatar

Innuma en peril

Bethelhuatong
Dani_AA🌈Bethel⛪huatong
歌词
作品
PRAISE THE LORD

Sung by Ps.Davidsam Joyson

Upload by Bethel

இன்னுமா என் பேரில் நம்பிக்கை

என் அப்பாவின் அன்பை நான்

என்ன சொல்ல என்ன சொல்ல

இன்னுமா என் பேரில் நம்பிக்கை

என் அப்பாவின் அன்பை நான்

என்ன சொல்ல என்ன சொல்ல

என்ன சொல்ல….

தடம் மாறிப் போன போது

பின் தொடர்ந்தீரே

நான் பாவசேற்றில் வீழ்ந்தபோது

தூக்கியெடுத்தீரே

தடம் மாறிப் போன போது

பின் தொடர்ந்தீரே

நான் பாவசேற்றில் வீழ்ந்தபோது

தூக்கியெடுத்தீரே

கரம் பிடித்த உம்மை நான்

உதறி தள்ளினேன்

உலக இன்பம் கண்டு

நான் தடுமாறினேன்

இந்த உலக இன்பம் கண்டு

நான் தடம் மாறினேன்

மீண்டும் தடம் மாறினேன்

இன்னுமா என் பேரில் நம்பிக்கை

என் அப்பாவின் அன்பை நான்

என்ன சொல்ல..

என்ன சொல்ல

----Break----

மாம்ச இச்சை, பொருளாசை

என்னை துரத்தவே

லோத்தின் மனைவி போல

நானும் திரும்பி பார்த்தேனே

மாம்ச இச்சை, பொருளாசை

என்னை துரத்தவே

லோத்தின் மனைவி போல

நானும் திரும்பி பார்த்தேனே

துளி விஷத்தை மனதுக்குள்ளே

அனுமதிக்கவே

முள்புதருக்குள்ளே விளைபயிராய்

தடுமாறினேன்

இயேசு அப்பா உம்மை விட்டு

நான் ஒளித்தோடினேன்

இயேசு அப்பா உம்மை விட்டு

நான் ஒளித்தோடினேன்

மீண்டும் மீண்டும் மீண்டும்

மீண்டும் ஒளித்தோடினேன்

மீண்டும் மீண்டும் மீண்டும்

பாவி ஒளித்தோடினேன்

இன்னுமா என் பேரில் நம்பிக்கை

என் அப்பாவின் அன்பை நான்

என்ன சொல்ல...என்ன சொல்ல...

----Break----

என்னை சுற்றி எத்தனையோ

பேர் இருந்துமே

பணம், பதவி, புகழ்

பகட்டு எல்லாம் இருந்துமே

என்னை சுற்றி எத்தனையோ

பேர் இருந்துமே

பணம், பதவி, புகழ்

பகட்டு எல்லாம் இருந்துமே

பல இரவுகள் மனமொடிந்து

தனித்திருந்தேனே

மீண்டும் ஒருநாள் அவர் மடியில்

மனங்கசந்தேனே

இயேசு அப்பா என்னை

மீண்டும் மீட்டெடுத்தாரே

இயேசு அப்பா என்னை

மீண்டும் மீட்டெடுத்தாரே

மீண்டும் மீண்டும் மீண்டும்

மீண்டும் மீட்டெடுத்தாரே

மீண்டும் மீண்டும் மீண்டும்

அன்பால் மீட்டெடுத்தாரே

இன்னுமா என் பேரில் நம்பிக்கை

என் அப்பாவின் அன்பை நான்

என்ன சொல்ல..

நான் என்ன சொல்ல...

இன்னுமே என் பேரில் நம்பிக்கை

இயேசு அப்பாவுக்கு நான்

என்றும் செல்லப் பிள்ளை...

என்றும் செல்லப் பிள்ளை...

更多Bethel热歌

查看全部logo