பெண் : விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
பெண் : விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலை அழகே இசை அமுதே…
இசை அமுதே……ஏ…..
பெண் : விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
ஆண் : அலை பாயும் கடலோரம்
இள மான்கள் போலே
ஆண் : அலை பாயும் கடலோரம்
இள மான்கள் போலே
ஆண் :விளையாடி
பெண் : இசை பாடி
இருவர் : விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
ஆண் : விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
பெண் : கண்ணோடு கொஞ்சும்
கலை அழகே இசை அமுதே…
இசை அமுதே……..
இருவர் : விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
ஆண் : தேடாத செல்வ சுகம்
தானாக வந்தது போல்
ஓடோடி வந்த சொர்க்க போகமே…
ஓடோடி வந்த சொர்க்க போகமே…
பெண் : காணாத இன்ப நிலை
கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும்
யோகமே வாழ்விலே
பெண் : விளையாடி
ஆண் : இசை பாடி
இருவர் : விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
இருவர் : விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
ஆண் : சங்கீத தென்றலிலே
சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே…
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே…
பெண் : மங்காத தங்கமிது
மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம் பாடுதே வாழ்விலே
பெண் : விளையாடி…
ஆண் : இசை பாடி
இருவர் : விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
பெண் : ஹா…..ஆஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
இருவர் : விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலை அழகே இசை அமுதே……ஏ…
இசை அமுதே……ஏ
இருவர் : விண்ணோடும் முகிலோடும்