menu-iconlogo
logo

Ragasiyamanadhu Kaadhal

logo
歌词
ரகசியமானது காதல் மிக மிக

ரகசியமானது காதல் ரகசியமானது காதல்

மிக மிக ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்

ஒரு தலையாகவும் சுகமனுபவிக்கும்

சுவாரஸ்யமானது காதல் மிக மிக

சுவாரஸ்யமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது

சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது

சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது

இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

வாசனை வெளிச்சத்தை போல

அது சுதந்திரமானதும் அல்ல

ஈரத்தை இருட்டினை போல

அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல

ரகசியமானது காதல் மிக மிக

ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்

ஒரு தலையாகவும் சுகமனுபவிக்கும்

சுவரஸ்யமானது காதல் மிக மிக

சுவாரஸ்யமானது காதல்

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது

கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது

கேட்கும் கேள்விக்காக தானே பதில் வாழுது

காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல

இயல்பானது

நீரினை நெருப்பினை போல

விரல் தொடுதலில் புரிவதும் அல்ல

காதலும் கடவுளை போல

அதை உயிரினில் உணரனும் மெல்ல

ரகசியமானது காதல் மிக மிக

ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்

ஒரு தலையாகவும் சுகமனுபவிக்கும்

சுவரஸ்யமானது காதல் மிக மிக

சுவரஸ்யமானது காதல்

Ragasiyamanadhu Kaadhal Harish Ragavendra/Harini - 歌词和翻唱