படம்: செந்தூரப்பூவே (1988)
பாடியவர்கள்: டாக்டர் பாலு, சித்ரா
ஆ: சின்ன கண்ணன்
தோட்டத்து பூவாக
ஒரு தேவதை
வந்தது நீராட
சின்ன கண்ணன்
தோட்டத்து பூவாக
ஒரு தேவதை
வந்தது நீராட
வெண்ணிற ரோஜா
தன்னிறம் மாறி
மாலை சூடுதே
அந்த வானம்
பூக்களை தூவாதோ
புது வாழ்த்து
கவிதைகள் பாடாதோ
பெ:சின்ன கண்ணன்
தோட்டத்து பூவாக
ஒரு தேவதை
வந்தது நீராட
வெண்ணிற ரோஜா
தன்னிறம் மாறி
மாலை சூடுதே
அந்த வானம்
பூக்களை தூவாதோ
புது வாழ்த்து
கவிதைகள் பாடாதோ
படம்: செந்தூரப்பூவே (1988)
பாடியவர்கள்: டாக்டர் பாலு, சித்ரா
பெ: பூவைப்போல
பூத்திருந்தேன்
பூவுக்காக
காத்திருந்தேன்
பூஜைக்காக
பூக்கள் தந்து
பூவை வாழ்வில்
மணம் தந்தாய்
ஆ: நெஞ்சம் என்னும்
பூங்குருவி
நித்தம் உந்தன்
பேர் எழுதி
சந்தம் பாட
என்னும் போது
சொந்தமாக நீ வந்தாய்
பெ: உனக்கெனவே
மனக்கதவை
திறந்தது
இங்கே வா வா
ஆ: உன்
மஞ்சள் குங்குமம்
ஒளிவீச
என்
நெஞ்சம் துள்ளுது
கதை பேச
பெ: சின்ன கண்ணன்
தோட்டத்து பூவாக
ஒரு தேவதை
வந்தது நீராட
ஆ: சின்ன கண்ணன்
தோட்டத்து பூவாக
ஒரு தேவதை
வந்தது நீராட
படம்: செந்தூரப்பூவே (1988)
பாடியவர்கள்: டாக்டர் பாலு, சித்ரா
ஆ: திங்கள் விண்ணில்
தேய்ந்தாலும்
கங்கை வெள்ளம்
ஓய்ந்தாலும்
எந்தன் அன்பு
தேயாது
அதில்
காதல் வெள்ளம்
ஓயாது
பெ: வானவில்லும்
நிறம் மாறும்
வீசும் தென்றல்
திசை மாறும்
மங்கை எந்தன்
காதல் உள்ளம்
என்றும்
இங்கே மாறாது
ஆ: மனதினிலே
கனவுகளை
விதைத்திட
இங்கே வா வா
பெ: என்
ஆசை நாடகம்
அரங்கேற
ஒரு
வேளை வந்தது
உன் வடிவாக
ஆ: சின்ன கண்ணன்
தோட்டத்து பூவாக
ஒரு தேவதை
வந்தது நீராட
பெ: சின்ன கண்ணன்
தோட்டத்து பூவாக
ஒரு தேவதை
வந்தது நீராட
ஆ: வெண்ணிற ரோஜா
தன்னிறம் மாறி
மாலை சூடுதே
பெ: அந்த வானம்
பூக்களை தூவாதோ
ஆ: புது வாழ்த்து
கவிதைகள் பாடாதோ
இருவரும்: சின்ன கண்ணன்
தோட்டத்து பூவாக
ஒரு தேவதை
வந்தது நீராட
வெண்ணிற ரோஜா
தன்னிறம் மாறி
மாலை சூடுதே
அந்த வானம்
பூக்களை தூவாதோ
புது வாழ்த்து
கவிதைகள் பாடாதோ
Thank You