menu-iconlogo
logo

Mayakkum Maalai

logo
歌词
பெண்: மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!

இன்னலை தீர்க்க வா

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!

இன்னலை தீர்க்க வா

பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே

பசும் புல் படுக்க பாய் போடுமே

பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே

பசும் புல் படுக்க பாய் போடுமே

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!

இன்னலை தீர்க்க வா

பெண்: ஆ…. ஆ.. ஆ…

பாலூட்டும் நிலவு தேனூட்டுமே

பாடும் தென்றல் தாலாட்டுமே

பாலூட்டும் நிலவு தேனூட்டுமே

பாடும் தென்றல் தாலாட்டுமே

புன்னை மலர்கள் அன்பினாலே

புன்னை மலர்கள் அன்பினாலே

போடும் போர்வை தன்னாலே

போடும் போர்வை தன்னாலே

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!

இன்னலை தீர்க்க வா

ஆன்: ஆ…. ஆ.. ஆ…

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே

பெண்: காண்போம் பேரின்பமே

ஆன்: கனியிதழ் காதல் பசி தீர்க்குமே

பெண்: காண்போம் பேரின்பமே

ஆன்: வானிலும் ஏது வாழ்விது போலே

பெண்: வசந்தமே இனி என்னாளும்

ஆன்: வானிலும் ஏது வாழ்விது போலே

பெண்: வசந்தமே இனி என்னாளும்

இருவர்: மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!

இன்னலை தீர்க்க வா

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!

இன்னலை தீர்க்க வா

பெண்: ஆ…. ஆ.. ஆ…

ஆன்: ஆ…. ஆ.. ஆ…

Mayakkum Maalai Jikki/A. M. Rajah - 歌词和翻唱