பெண் :உன்னாலே நான்
கொண்ட காயங்களை
முன்னும் பின்னும் அறிவேன்
ஆண் :கண்ணாலே நீ
செய்யும் மாயங்களை
இன்றும் என்றும் அறிவேன்
பெண் :மின்சாரம் போல்
எனை தாக்குகிறாய்
மஞ்சத்தை போர்க்களம்
ஆக்குகிறாய்
ஆண் :கண்ணே உன்
கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால்
மெய் தொட்டால்
மீட்டிடுமோ
பெண் :கோட்டைக்குள் நீ புகுந்து
வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்று விட்டேன்
நீ என்னை ஆளுகிறாய்
ஆண் :சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண் :சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
ஆண் :பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே
பெண் :சிந்தும் பனித் துளியே
என்னைச் சேரும் இளங்கிளியே
ஆண் :சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண் :சொர்க்கத்தின் வாசற்படி
karthickboss