menu-iconlogo
huatong
huatong
avatar

Sindhiya Venmani Sippiyil

K. J. Yesudashuatong
KRISH~MANIhuatong
歌词
作品
ஆ:சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு

என் கண்ணம்மா

செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

என் பொன்னம்மா

சேலாடும் கண்ணில்.. பாலூறும் நேரம்

செவ்வானம் எங்கும்.. பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு

என் கண்ணம்மா

செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு..

ஆ: பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்

கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்

பெ: அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்

அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்

ஆ: இன்றைக்கும் என்றைக்கும்..

நீ எந்தன் பக்கத்தில்

பெ: இன்பத்தை வர்ணிக்கும்..

என்னுள்ளம் சொர்க்கத்தில்

ஆ: மெல்லிய நூலிடை வாடியதேன்

மன்மத காவியம் மூடியதேன்

இருவரும்: அள்ளியும்

கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்

அன்பென்னும் கீர்த்தனை பாடியதேன்

ஆ:சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு

என் கண்ணம்மா

செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

என் பொன்னம்மா

சேலாடும் கண்ணில்.. பாலூறும் நேரம்

செவ்வானம் எங்கும்.. பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு

என் கண்ணம்மா

செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

ஆ: தாய் தந்த பா..சம் தந்தை உன் வீரம்

சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

பெ: காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்

என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

ஆ: வீட்டுக்கும் நாட்டுக்கும்

நான் பாடும் பாட்டுக்கும்

பெ: எத்திக்கும் தித்திக்கும்

என் இன்ப கூட்டுக்கும்

ஆ: என் மகன் காவிய நாயகனே

என் உயிர் தேசத்து காவலனே

இருவரும்: வாடிய பூமியில்

கார்முகிலாய் மழை தூவிடும்

மானிடன் என் மகனே

ஆ:சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு

என் கண்ணம்மா

செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

என் பொன்னம்மா

சேலாடும் கண்ணில்.. பாலூறும் நேரம்

செவ்வானம் எங்கும்.. பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு

என் கண்ணம்மா

செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு...

更多K. J. Yesudas热歌

查看全部logo
Sindhiya Venmani Sippiyil K. J. Yesudas - 歌词和翻唱