menu-iconlogo
huatong
huatong
kumaresh-ennai-kollathey-from-geethaiyin-raadhai-cover-image

Ennai Kollathey (From "Geethaiyin Raadhai")

Kumareshhuatong
sourcecodinghuatong
歌词
作品
என்னை கொள்ளாதே

தள்ளி போகாதே

நெஞ்சை கிள்ளாதே கண்மணி

சொன்ன என் சொல்லில்

இல்லை உண்மைகள்

ஏனோ கோபங்கள் சொல்லடி

உன்னை தீண்டாமல்

உன்னை பார்க்காமல்

கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை

என்னுள் நீ வந்தாய்

நெஞ்சில் வாழ்கின்றாய்

விட்டு செல்லாதே

இது நியாயமில்லை

கண்ணை மூடி கொண்டாலும்

உன்னை கண்டேன்

மீண்டும் ஏன் இந்த ஏக்கம்

வெள்ளை மேக துண்டுக்குள்

எழும் மின்னல் போல்

எந்தன் வாழ்வெங்கும் மின்னல்

என் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்

என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்

சொன்ன சொல்லின் அர்த்தங்கள்

என்னுள் வாழுதே

தூரம் தள்ளி சென்றாலும் உயிர்

தேடுதே

ஆசை வார்த்தை எல்லாமே

இன்று கீறலாய்

எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்

என்னுள் நீ வந்தாய்

இன்னும் வாழ்கின்றாய்

உந்தன் சொல்லாலே தூரம் உண்டாக்கினாய்

என்னை தீண்டாதே

என்னை பார்க்காதே

ஒன்றும் பேசாதே

போதும் துன்பங்கள்

என்னை விட்டு செல்லாதே

எந்தன் அன்பே

வேண்டும் உன் காதல் ஒன்றே

உன்னை மட்டும் நேசித்தேன்

இது உண்மை

இன்னும் ஏன் இந்த ஊடல்

என் உயிர் காதலை

உந்தன் காதோரம்

ஒரு முறையாவது

சொல்ல நீ வேண்டும்

எந்தன் ஆசை முத்தங்கள்

உன்னை சேருமோ

இல்லை காதல் யுத்தங்கள்

இன்னும் நீளுமோ

உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி

நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி

என்னை கொள்ளாதே

தள்ளி போகாதே

நெஞ்சை கிள்ளாதே கண்மணி

சொன்ன என் சொல்லில்

இல்லை உண்மைகள்

ஏனோ கோபங்கள் சொல்லடி

என்னை கொள்ளாதே

தள்ளி போகாதே

நெஞ்சை கிள்ளாதே கண்மணி

சொன்ன என் சொல்லில்

இல்லை உண்மைகள்

ஏனோ கோபங்கள் சொல்லடி...

更多Kumaresh热歌

查看全部logo