menu-iconlogo
huatong
huatong
avatar

Chinna Chinna Kiliye

Prashanthhuatong
avonlady6huatong
歌词
作品
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா

தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா

களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா

கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா

கண்ணால் கண்டால் நீ சொல்லு

உன் காதில் விழுவென் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

நிலா நிலா காதல் நிலா

அவள் வாழ்வது உள்ளூரிலா

உலா உலா வா வெண்ணிலா

கண்வாழ்வது கண்ணீரிலா

பாதை கொண்ட மண்ணே அவளின்

பாத சுவடு பார்த்தாயா

தோகை கொண்ட மயிலே அவளின்

துப்பட்டாவை பார்த்தாயா

ஊஞ்சலாடும் முகிலே அவளின்

உச்சந்தலையை பார்த்தாயா

ஓடுகின்ற நதியே அவளின்

உள்ளங்காலை பார்த்தாயா

கண்ணால் கண்டால் நீ சொல்லு

உன்காலில் விழுவேன் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

எங்கே எங்கே விண்மீன் எங்கே

பகல் வானிலே நான் தேடினேன்

அங்கே இங்கே காணோம் என்று

அடி வானிலே நானேறினேன்

கூடு தேடும் கிளியே அவளின்

வீடு எங்கே பார்த்தாயா

உள்ளாடும் காற்றே அவளின்

உள்ளும் சென்று பார்த்தாயா

தூறல் போடும் அவளின் முகிலே உயிரை

தொட்டுப் போனவள் பார்த்தாயா

பஞ்சு போல நெஞ்சை தீயில்

விட்டுப் போனவள் பார்த்தாயா

கண்ணால் கண்டால் நீ சொல்லு

உன் காலில் விழுவேன் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே

பஞ்சவர்ண கிளியே

பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா

தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா

களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா

கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா

கண்ணால் கண்டால் நீ சொல்லு

உன் காதில் விழுவென் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

更多Prashanth热歌

查看全部logo