menu-iconlogo
huatong
huatong
歌词
作品
நான் ஒரு மேடைப் பாடகன்

நான் ஒரு மேடைப் பாடகன்

ஆயினும் இன்னும் மாணவன்

ஆயினும் இன்னும் மாணவன்

நான் கற்றது கை அளவு

இன்னும் உள்ளது கடலளவு

நான் கற்றது கை அளவு

இன்னும் உள்ளது கடலளவு

நான் எங்கெங்கு என்னென்ன

சங்கீதம் உண்டென்று

அங்கங்கு செல்கின்றவன்

நான் ஒரு மேடைப் பாடகன்

ஹஹஹாஹா... Pleasure is mine

நான் சபை ஏறும் நாள் வந்தது

நாம் சந்திக்கும் நிலை வந்தது

நான் சபை ஏறும் நாள் வந்தது

நாம் சந்திக்கும் நிலை வந்தது

என் சங்கீதம் தாய் தந்தது

தேன் சந்தங்கள் தமிழ் தந்தது

நானும் அன்பான நண்பர்கள் முன்பாக

இந்நேரம் பண்பாட வந்தேன்

நெஞ்சில் உண்டான எண்ணத்தை

உல்லாச வண்ணத்தை பாட்டாகத் தந்தேன்

பாடப் பாட ராகம் வரும்

பார்க்கப் பார்க்க மோகம் வரும்

பாடப் பாட ராகம் வரும்

பார்க்கப் பார்க்க மோகம் வரும்

நான் எல்லோரும் தருகின்ற

நல் வாக்கை துணை கொண்டு

செல்வாக்கை பெறுகின்றவன்

நான் ஒரு மேடைப் பாடகன்

நான் அரங்கேற்றம் ஆகாதவள்

யார் முன்னாலும் பாடாதவள்

நான் அரங்கேற்றம் ஆகாதவள்

யார் முன்னாலும் பாடாதவள்

என் சங்கீதம் மழலை மொழி

நான் நின்றாடும் பவழக் கொடி

பாதி கண் கொண்டு பார்க்கின்ற பூச் செண்டு

பெண்ணென்று முன் வந்து பாட

அந்த பக்கத்தில் நிற்கின்ற

பருவத்து நெஞ்சங்கள் பார்வைக்குள் ஆட

காதல் கீதம் உண்டாகலாம்

பாடும் நெஞ்சம் ரெண்டாகலாம்

நான் வாய் கொண்டு சொல்லாமல்

வருகின்ற எண்ணத்தை

கண் கொண்டு சொல்கின்றவள்

ஓ...

நான் ஒரு மேடைப் பாடகி

பால் நிலவென்ன நேர் வந்ததோ

நூல் இடை கொண்டு நெளிகின்றதோ

சேல் விழி என்ன மொழிகின்றதோ

யார் உறவென்று புரிகின்றதோ

இங்கு வண்டொன்று செண்டோன்று

என்றென்றும் ஒன்றென்று

கண் கொண்டு பேச

அந்த பாஷைக்கும் ஆசைக்கும்

அர்த்தங்கள் கற்பிக்கும் சிற்பங்கள் கூற

காலம் நேரம் பொன்னானது

காவல் நேரம் நெஞ்சானது

நான் யாருக்கு யார் மீது

நேசங்கள் உண்டென்று

நேருக்கு நேர் கண்டவன்

ஹா...

நான் ஒரு மேடைப் பாடகன்

MUSIC

ஆயினும் இன்னும் மாணவன்

MUSIC

நான் கற்றது கை அளவு

இன்னும் உள்ளது கடலளவு

இங்கு நாமாட நம்மோடு

நண்பர்கள் எல்லோரும்

அங்கங்கு ஆடட்டுமே

更多S. P. Balasubrahmanyam/L. R. Eswari/T.M. Soundararajan热歌

查看全部logo