ராசா மகராசா எங்கய்யா
உன் ராசாங்கம் சரிஞ்சாசோ சொல்லையா
கண்ணோடு நீ இருந்த
கண்மூடி ஏன் பறந்த
ராசா நீ என் ரோசா
ராணி மகராணி கலைவாணி
என் ராத்தூக்கம் பறிபோச்சு மருதாணி
பொன்னான உன் காதில்
என் ஆச சொன்னேனே
ராணி நீ என் தேனீ
ஏது ஒரு வார்த்தை சொன்னாயோ
நீ எமனோட உறவாட நின்னாயோ
ஐயோ என்ன பெத்த ராசாவே
எந்திரிக்க மாட்டாயோ
ராசா ராசா ராசா
நீதான் எனக்காக வர வேணும்
உன் நெஞ்சுக்குள்ள இடம் ஒன்னு தர வேணும்
உன்னோட ஒரு வார்த்தை
என்னோட மறு வாழ்க்க
நீயும் நானும் சேர
காலை என்ன மாலை என்ன காத்திருக்க
காலம் என்ன நேரம் என்ன பூத்திருக்க
அள்ளிக்கொள்ள பின்னிக்கொள்ள
காவியங்கள் வந்து நின்று பேறு சொல்ல
காரணங்கள் ஏதும் இங்கு தேவையில்ல
கண்டுகொள்ள ஏதுமில்ல
தொட்டாலும் பிரியாத நோயம்மா
அது விட்டாலும் விலகாது பாரம்மா
தேகத்த பூட்டி வைக்கும்
தேசத்தை ஆட்டி வைக்கும்
காதல் ஏது லேசா