menu-iconlogo
logo

Muthumani maala

logo
歌词
ஆண்: முத்து மணி மாலை

உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டு விட்டுப் போராட

உள்ளத்துல நீதானே

உத்தமி உன் பேர்தானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

முத்து மணி மாலை

உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

அன்புடன் வழங்குவது

Hy KTunes

பெண்: கொலுசுதான் மெளனமாகுமா

மனசு தான் பேசுமா

ஆண்: மேகந்தான் நிலவை மூடுமா

மவுசு தான் குறையுமா

பெண்: நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு

காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண்: வாக்கப்பட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசாவே

பெண்: தாழம்பூவுல வீசும் காத்துல

வாசம் தேடி மாமா வா...

ஆண்: முத்து மணி மாலை

பெண்: என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

ஆண்: வெட்கத்துல சேலை

பெண்: கொஞ்சம் விட்டு விட்டுப் போராட

அன்புடன் வழங்குவது

Hy KTunes

ஆண்: காலிலே போட்ட மிஞ்சி தான்

காதுல பேசுதே

பெண்: கழுத்துல போட்ட தாலி தான்

காவியம் பாடுதே

ஆண்: நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்

பொட்டுவச்சதாரு நான் தானே

பெண்: அத்திமரப் பூவும் அச்சப்படுமா

பக்கத்துணை யாரு நீ தானே

ஆண்: ஆசை பேச்சுல பாதி மூச்சுல

லேசா தேகம் சூடேற

பெண்: முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டு விட்டுப் போராட

உள்ளத்துல நீ தானே

உத்தமரும் நீதானே

இது நந்தவனப் பூ தானே

புது சந்தனமும் நீதானே

ஆண்: ஒரு நந்தவனப் பூ தானே

புது சந்தனமும் நீதானே

Muthumani maala Sp Balasubramanyam - 歌词和翻唱