menu-iconlogo
logo

Pura Pura Pen Pura

logo
歌词
புறா புறா பெண் புறா..

மடி கொடு மன்மதா...

மனம் தேடிய காதலன்

மலர் சூடிய வேளையில்

என் சோலையில்

பொன் வேளையில்

குயில் கூவியதே...

என் ராமன்... நீதானே...

உன் சீதை... நானே...

என் ராமன்... நீதானே...

உன் சீதை... நானே...

புறா புறா பெண் புறா..

மடி கொடு மன்மதா...

இன்று நேற்று வந்த பந்தம் அல்ல

இது இரவில் தோன்றும்

வானவில்லும் அல்ல...

காதல் உயிர் கலந்ததென்ன மெல்ல

நான் கவியும் இல்ல

மேலும் மேலும்சொல்ல...

என் காதல் தேவன்

கண்டு கொண்ட நாள் இது....

என் கனவில் கூட

ராஜராகம் கேட்குது....

மழையோ சுடு கின்றது

வெயிலோ குளிர்கின்றது

தொடவும் விரல் படவும்

புது சுதி ஏறியது....

என் ராமன்... நீதானே...

உன் சீதை... நானே...

என் ராமன்... நீதானே...

உன் சீதை... நானே...

புறா புறா பெண் புறா..

மடி கொடு மன்மதா...

தொட்டு தொட்டு கோடு தாண்ட வேண்டும்

உன் தொல்லை கூட இன்பமாக வேண்டும்

விட்டு விட்டு காதல் செய்ய வேண்டும்

புது வீணை போல என்னை மீட்ட வேண்டும்

கண்களை மூடி கற்பனை கோடி காணலாம்......

கற்பனை மெல்ல கட்டிலில் உண்மை ஆகலாம்...

இவள் தேடிய காதலன்

இதழ் மேல் ஒரு பாடகன்

சரசம் புது சரசம் கொண்டு உரசும் தலைவன்

என் ராமன்... நீதானே...

உன் சீதை... நானே...

என் ராமன்... நீதானே...

உன் சீதை... நானே...

Pura Pura Pen Pura S.P.Balasubramaniyam/K.s. Chitra - 歌词和翻唱