படம் : உயிரா மானமா
இசை : M.S.Viswanathan
குரல் : TMS, P.Suseela
பதிவேற்றம் :
M : கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு
F : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு
பதிவேற்றம் :
F : கோடை வரும் வெய்யில் வரும்
கோடைக்கு பின்னே மழையும் வரும்
கோபம் வரும் வேகம் வரும்
கோபத்தின் பின்னே குணமும் வரும்
M : மேகங்களே மேகங்களே
வான் மீதிலே உங்கள் தேரோட்டமா
வானம் என்னும் அன்னை தந்த
பாசத்தினால் வந்த நீரோட்டமா
F : கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு
பதிவேற்றம் :
F : கண்ணீரிலே தாலாட்டவும்
கல்யாண பெண்ணாக சீராட்டவும்
அண்ணன் உண்டோ தந்தை உண்டோ
எங்கள் அண்ணி என்னும்
அன்னை அங்கே உண்டோ
M : பறவைகளே பறவைகளே
பாசத்தை என் வீட்டில் பாருங்களேன்
அம்மா என்னும் தெய்வம் எம்மை
அரசாளும் கோலத்தை காணுங்களேன்
Both : கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு
F : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பதிவேற்றம் :
நன்றி...நன்றி...நன்றி...