menu-iconlogo
logo

Mayakkam Enathu Thaayagam

logo
歌词
மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய் மொழி

கலக்கம் எனது காவியம்

நான் கண்ணீர் வரைந்த ஓவியம்

மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய் மொழி

கலக்கம் எனது காவியம்

நான் கண்ணீர் வரைந்த ஓவியம்

மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய் மொழி

பகலில் தோன்றும் நிலவு

கண் பார்வைக்கு மறைந்த அழகு

பகலில் தோன்றும் நிலவு

கண் பார்வைக்கு மறைந்த அழகு

திரை மூடிய சிலை நான்

துன்பச் சிறையில் மலர்ந்த மலர் நான்

திரை மூடிய சிலை நான்

துன்பச் சிறையில் மலர்ந்த மலர் நான்

மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய் மொழி

கலக்கம் எனது காவியம்

நான் கண்ணீர் வரைந்த ஓவியம்

மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய் மொழி

நானே எனக்குப் பகையானேன்

என் நாடகத்தில் நான் திரை ஆனேன்

தேனே உனக்குப் புரியாது

அந்தத் தெய்வம் வராமல் விளங்காது

நானே எனக்குப் பகையானேன்

என் நாடகத்தில் நான் திரை ஆனேன்

தேனே உனக்குப் புரியாது

அந்தத் தெய்வம் வராமல் விளங்காது

விதியும் மதியும் வேறம்மா

அதன் விளக்கம் நான் தான் பாரம்மா

விதியும் மதியும் வேறம்மா

அதன் விளக்கம் நான் தான் பாரம்மா

மதியில் வந்தவள் நீயம்மா

என் வழி மறைத்தாள் விதியம்மா

மதியில் வந்தவள் நீயம்மா

என் வழி மறைத்தாள் விதியம்மா

மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய் மொழி

கலக்கம் எனது காவியம்

நான் கண்ணீர் வரைந்த ஓவியம்

மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய் மொழி

Mayakkam Enathu Thaayagam T.M.Sounderarajan - 歌词和翻唱