menu-iconlogo
logo

Onakkaga Poranthene Pannaiyarum Padminiyum

logo
歌词
ஒனக்காக பொறந்தேனே எனதழகா

பிரியாம இருப்பேனே பகலிரவா

ஒனக்காக பொறந்தேனே எனதழகா

பிரியாம இருப்பேனே பகலிரவா

ஒனக்கு வாக்கபட்டு வருசங்கள் போனா என்ன

போகாது உன்னோட பாசம்

என் உச்சி முத பாதம் வரை

என் புருஷன் ஆட்சி

ஊர் தெக்காலதான் நிக்கும் அந்த

முத்தாலம்மன் சாட்சி

எனக்காக பொறந்தாயே எனதழகி

இருப்பேனே மனசெல்லாம் உன எழுதி

ஒருவாட்டி என ஓரசாட்டி உன

உறுத்தும் பஞ்சன மெத்தையும்

ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில

கருவாட்டு பான கெடச்சாக்கா பூன

விடுமா சொல்லடி சுந்தரி

நெத்திலி வத்தலு வீசுற வாடயில

பூவாட்டம் ஒக்காந்து மாவாட்டும் நேரந்தான்

முன்கைய நீட்டாத முந்தான ஓரந்தான்

பூவாடை தூக்காதா பூவாடும் காக்காதா

நீ முத்தி போன கத்திரியா

புத்தம் புது பிஞ்சு

நான் முந்தாநாளு ஆளானதா

எண்ணுது உன் நெஞ்சு

ஒனக்காக பொறந்தேனே எனதழகா

பிரியாம இருப்பேனே பகலிரவா

ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு

உனக்கா ஒவ்வொரு மாதிரி

நாக்குல நெஞ்சுல பச்சையா குத்தி வெச்சேன்

இது தாண்டி ரதம்

இதுல தான் நெதம் உனதான் ஒக்காரவெச்சு நான்

ராசாதி ராசனா ஊர்கோலம் வந்திடுவேன்

ஒன்னோட நான் சேர தின்னேனே மண் சோறு

நேந்து தான் சாமிக்கு வப்பேனே வெள்ளாடு

ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும்

நான் காத்தாட்டமா நாத்தாட்டமா

உன்னால் எழும் நாளும்

நீ மாலையிடும் வேளை எது

கேக்குது என் தோளும்

ஒனக்காக பொறந்தேனே எனதழகா

பிரியாம இருப்பேனே பகலிரவா

ஒனக்கு மாலையிட்டு வருசங்கள் போனா என்ன

போகாது உன்னோட பாசம்

Onakkaga Poranthene Pannaiyarum Padminiyum Vijay Sethupathi - 歌词和翻唱