menu-iconlogo
logo

Kannukkulle (From "Sita Ramam (Tamil)")

logo
歌词
அ-ஆ-அ-அ

அ-ஆ-ஆ-ஆ

விண்ணோடு மின்னாத விண்மீன் எது

அது அது உன் புன்னகை

ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது

அது அது உன் பாதுகை

துடிக்கும் எரிமலை எது

அது என் நெஞ்சம் தானடி

இனிக்கிற தீ எது

அது உந்தன் தீண்டலே

சுடுகிற பொய் எது

அது உந்தன் நாணமே அன்பே

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு

எனது இரவை திருடுதோ

உயிரினை வருடுதோ

கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு

உனது வதனம் வரைந்ததோ

இருதயம் நிறைந்ததோ

(திரன-நான-திருநனா)

(திரன-நான-நா)

(தீர்ருனா-தீர்ருனா)

(தீர்ருனா-திருநானா)

ஊசி கண் காணா நூலும் எது

பெண்ணே உன் இடை அது

யாரும் கொள்ளா இன்பம் கொண்டது எது

நீ சூடும் ஆடை அது

மயக்கிடும் போதையோ எது

அடுத்து நீ சொல்ல போவது

ஆடைகளை களைந்த பிறகும் ஒளியை அணிவது

நிலா அது

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு

எனது இரவை திருடுதோ

உயிரினை வருடுதோ

கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு

உனது வதனம் வரைந்ததோ

இருதயம் நிறைந்ததோ

(தானதீர-தீம்த-திரன)

(உதனி-ததனி-திரநனா)

(தானதீர-தீம்த-திரன)

(உதனி-ததனி-திரநனா)

(திரதிரநன-ததரினா)

(திரதிரநன-ததரினா)

(தான-தீர-ததனி-திரன)

(தீம்த-ததரி-திரநனா)

கோபங்கள் இல்லா யுத்தம் எது

மெத்தையில் நிகழ்வது

மௌனம் அதை வெல்லும் ஓர் பாடல் எது

முத்தத்தின் ஒலி அது

பதில் இல்லா கேள்வியும் எது

அடுத்து நீ கேட்க போவது

இரு நிழல் நெருங்கும் பொழுது

நொறுங்கும் பொருள் எது

ம்-ஹும்-ம்-ஹும்

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு

எனது இரவை திருடுதோ

உயிரினை வருடுதோ

கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு

உனது வதனம் வரைந்ததோ

இருதயம் நிறைந்ததோ

Kannukkulle (From "Sita Ramam (Tamil)") Vishal Chandrashekhar/Harry Harlan/Sinduri Vishal - 歌词和翻唱