menu-iconlogo
huatong
huatong
avatar

Velli kolusu mani

Arunmozhi/K.s. Chitrahuatong
memoree1huatong
歌詞
作品
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி

சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன

கூடாம கூட வச்சு சேத்ததென்ன

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி

சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்

மெல்ல மெல்ல வந்து அணைக்கும்

மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச

கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும்

பொன்னி நதிப்போல நானும் உன்ன

பொத்தி பொத்தி எடுக்கட்டுமா

கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண

கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா

காத்து காத்து நானும்

பூத்துப் பூத்துப் போனேன்

சேந்து பாடும்போது தேரில் ஏறலானேன்

உன் பேரச்சொல்லி பாடி

வச்சா ஊறுதம்மா தேனே

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி

சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன

கூடாம கூட வச்சு சேத்ததென்ன

கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த

உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான்

எண்ணம் முழுதும் பொங்கி வழியும்

வாங்கினது நல்ல வரம்தான்

கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன்

நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன்

பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன்

சாவியத்தான் தொலச்சுபுட்டேன்

உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு

மெழுகுப்போல நானும் உருகிப்போனேன் கேட்டு

காலமெல்லாம் கேட்டிடத்தான்

காத்திருக்கேன் பாத்து

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி

சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன

கூடாம கூட வச்சு சேத்ததென்ன

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி

சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

更多Arunmozhi/K.s. Chitra熱歌

查看全部logo