menu-iconlogo
logo

Vizhigalil Oru Vaanavil

logo
歌詞
விழிகளில் ஒரு வானவில்

இமைகளை தொட்டு பேசுதே

இது என்ன புது வானிலை

மழை வெயில் தரும்

உன்னிடம் பார்கிறேன்...

நான் பார்கிறேன்...

என் தாய்முகம் அன்பே...

உன்னிடம் தோற்கிறேன்...

நான் தோற்கிறேன்...

என்னாகுமோ இங்கே...

முதன் முதலாய் மயங்குகிறேன்...

கண்ணாடி போல தோன்றினாய்

என் முன்பு என்னை காட்டினாய்

கனா எங்கும் வினா...

விழிகளில் ஒரு வானவில்

இமைகளை தொட்டு பேசுதே

இது என்ன புது வானிலை

மழை வெயில் தரும்

நீ வந்தாய் என் வாழ்விலே

பூ பூத்தாய் என் வேரிலே

நாளையே நீ போகலாம்

என் ஞாபகம் நீ ஆகலாம்

தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ...

யார் இவன்... யார் இவன்...

ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்.

யார் இவன். யார் இவன்

நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்

இனம் புரியா உறவிதுவோ

என் தீவில் பூத்த பூவிது

என் நெஞ்சில் வாசம் தூவுது

மனம் எங்கும் மனம்

விழிகளில் ஒரு வானவில்

இமைகளை தொட்டு பேசுதே

இது என்ன புது வானிலை

மழை வெயில் தரும்

நான் உனக்காக பேசினேன்

யார் எனக்காக பேசுவார்

மௌனமாய் நான் பேசினேன்

கைகளில் மை பூசினேன்

நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்

அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்

மீன் ஆகிறேன் அன்பே

உன் முன்பு தானடா இப்போது நான்

பெண்ணாகிறேன் இங்கே

தயக்கங்களால் திணறுகிறேன்

நில்லென்று சொன்ன போதிலும்

நில்லாமல் நெஞ்சம் ஓடுதே

இதோ உந்தன் வழி

Vizhigalil Oru Vaanavil G. V. Prakash/Saindhavi - 歌詞和翻唱