menu-iconlogo
huatong
huatong
歌詞
作品
ஒளி இல்லா உன் மொழிகள்

விடை தேடும் என் விழிகள்

இமைக்காத நம் நொடிகள்

கடிகார தேன் துளிகள்

அடி வாயார உன் காதல்

நீ சொல்லடி

வாராத நடிப்பெல்லாம் வேண்டாம்டி

மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி

கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி

விளம்பர இடைவெளி மாலையில்

உன் திருமுகம் திறக்கின்ற வேலையில்

என் நிறமற்ற இதயத்தில் வானவில்

அடி என்ன நிலை உந்தன் மனதில்

நான் உனதே அடி நீ எனதா?

தெரியாமல் நானும் தேய்கிறேன்

இல்லை என்றே சொன்னால் இன்றே

என் மோக பார்வை மூடுவேன்

காதல் பூவை

நான் ஏற்றுக்கொண்டால்

உன் காத்திருப்பு நிறைவாகுமே

காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்

நம் கால் தடங்கல்

அவை திசை மாறுமே

இவளின் கனவோ

உள்ளே ஒளியும் இரவும் பகலும்

இதயம் வழியும்

வழியும் கனவு இதழை அடையும்

எந்த காட்சியில் அது வார்த்தையாகிடும்

விளம்பர இடைவெளி மாலையில்

உன் திருமுகம் திறக்கின்ற வேலையில்

என் நிறமற்ற இதயத்தில் வானவில்

அடி என்ன நிலை உந்தன் மனதில்

நிலமெல்லாம் உன் தடமே

நிலவெல்லாம் உன் படமே

நிஜமெல்லாம் உன் நிறமே

நினைவெல்லாம் உன் நயமே

மதுரம் கொஞ்சம் இளைஞன் நீயோ

மனமே இல்லா இறைவன் நீயோ

வயதை கடியும் குழந்தை நீயோ

வரம்பு மீறலோ

என்னை தொடரும் தூறலோ

நான் உனதே அடி நீ எனதா?

தெரியாமல் நானும் தேய்கிறேன்

இல்லை என்றே சொன்னால் இன்றே

என் மோக பார்வை மூடுவேன்

நான் உனதே அடி நீ எனதா?

தெரியாமல் நானும் தேய்கிறேன்

இல்லை என்றே சொன்னால் இன்றே

என் மோக பார்வை நான் மூடுவேன்

更多Hiphop Tamizha/Srinisha Jayaseelan/Sudarshan Ashok/Christopher Stanley熱歌

查看全部logo