இந்த அழகிய பாடலை இசையமைத்து திரையில்
பாடி நம்மை மகிழ்வித்த
'இசைஞானி' இளையராஜா அவர்களுக்கும்
இணைந்து பாடிய
திருமதி.ஜானகி அவர்களுக்கும் நன்றி
பெண்: சாண் பிள்ளையானாலும்
நீ ஆண்பிள்ளை தான்யா
நீ சின்னவனானாலும்
என் மன்னவன் தான்யா
காலமெல்லாம் ஒன்னோட தான்
கூட வர ஆசப்பட்டேன்
கல்யாணந்தான் கட்டி வச்சு
தள்ளி வச்சா என்னா செய்வேன்
சாண் பிள்ளையானாலும்
நீ ஆண்பிள்ளை தான்யா
நீ சின்னவனானாலும்
என் மன்னவன் தான்யா
ஆண்: (வசனம்) ஏண்டி பாட்டா படிக்கிற?
ஆண்: பெரிய S.ஜானகின்னு நெனப்பா ஒனக்கு
ஆண்: மூக்கு முழி பாக்காமத்தான்
மாலையிட்ட தியாகியடி
பெண்: ம்க்கும்
ஆண்: காசு பணம் கேட்காமத்தான்
கட்டிக்கிட்ட மச்சானடி
பெண்: பண்ணிய புண்ணியம் தான்
ஒன் சோடியா சேர்ந்துக்கிட்டேன்
ஆண்: ம்க்கும்
பெண்: எப்பவும் இப்படியே
வாழ சாமிய நேர்ந்துக்கிட்டேன்
ஆண்: போடி புண்ணியமில்லையடி
நா பண்ணிய பாவமடி
கட்டிலும் மெத்தையும்தான்
என்னை கேலியா பேசுதடி
பெண்: ஒன்னைப்போல நானும்தானே
உள்ளுக்குள்ள வாடுறேனே
என்ன செய்ய தொட்டா இப்போ
தோஷம் வரும் ராசாவே
சாண் பிள்ளையானாலும்
நீ ஆண்பிள்ளை தான்யா
ஆண்: அது என்னமோ நெஜந்தான்
பெண்: நீ சின்னவனானாலும்
என் மன்னவன் தான்யா
ஆண்: பேசி பேசி ஜெயிக்கிறது
பொண்டாட்டிங்க வேடிக்கைதான்
பெண்: ஹான்
ஆண்: பேச்சை கேட்டு மயங்குறது
ஆம்பளைங்க வாடிக்கைதான்
பெண்: நெத்தியில் வச்சுருக்கும்
வட்ட பொட்டுல நீயிருக்க
ஆண்: ஸ்ஸ்ஸ்ஸ்
பெண்: தல மத்தியில் வச்சுருக்கும்
ஆச பூவுல நீயிருக்க
ஆண்: ஐஸ் ஐஸ்
மன்மதன் போலவே தான்
பொண்ணு மாப்புள தேடிடுவா
அடி என்னைப்போல் வாச்சுப்புட்டா
உன்னை போலதான் ரீல் விடுவா
பெண் : கொஞ்சினாக்கா கொண்டாட்டந்தான்
மாமா வந்தா திண்டாட்டந்தான்
கொஞ்சம் பொறு காலம் வரும்
நேரம் வரும் ராசாவே
ஆண்: ஹேய் .. சாண்புள்ளயானாலும்
நா ஆண்பிள்ளை தாண்டி
நா சின்னவனானாலும்
உன் மன்னவன் தாண்டி
பெண்: ஆமா
காலமெல்லாம் உன்னோடதான்
ஆண்: பம் பம்...பா
பெண்: கூட வர ஆசப்பட்டேன்
ஆண்: ஹா ஹா ஹான்
பெண்: கண்ணாலந்தான் கட்டி வச்சு
ஆண்: ரம் பம்..பா
பெண்: தள்ளி வச்சா என்ன்னா செய்வேன்
ஆண்: பம் பம்
பெண்: சாண்புள்ளையானாலும்
நீ ஆண் புள்ளதான்யா
ஆண்: ஒத்துக்கோ
பெண்: நீ சின்னவன் ஆனாலும்
என் மன்னவன் தான்யா
ஆண்: கும் துக்கும் கும் துக்கும் கும்