அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
என் சிலம்பொலியும் புலம்புவது கேள்
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு
விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
Thagida dheem tha,
Thagida dheem tha
Thagida dheem tha,
Thagida dheem tha
Thagida dhom, thagida dhom
Thadheem tha,
Thadheem tha, thakka
Thagida dhom, thagida dhom
Thadheem tha,
Thadheem tha, thakka
ஆஆ...
ஆகாயம் இல்லாமலே ஒரு
நிலவு தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லமலே ஒரு
கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத
தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
விடியாத இரவேது கிடையாது என்று
ஊர் சொன்ன
வார்த்தைகைள் பொய்யானது
வசந்தம் இனி வருமா
வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம்
ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு
விழியில் வரும்பொழுது
அழகு மலராட
அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
என் சிலம்பொலியும் புலம்புவது கேள்
ஆஆ...
ஊதாத புல்லாங்குழல் எனதழகு
சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு
துணையைத் தேடாத
வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப்
பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக்
கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத
நிலம்போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது
தனிமையிலும் தனிமை
கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில்
எதற்கு இந்த இளமை
வேறென்ன நான் செய்த பாவம்
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு
விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
சிலம்பொலியும் புலம்புவது கேள்
Sasasa nini dhadhadha
Mapa gagaga sasani
Ririni sasa gagaga mapa
dhadhadha sasani
Sagasa nisa sagasa nisa
Sagasa nisa sagasa nipa
Nisari dhani nisari dhani
Nisari dhani nisari dhapa
Girda thagida dhom, thagida dhom
Girda thagida dhom, thagida dhom
Thagida dhom, thagida dhom, thagida
Dhom, thakkida thakida dhom
Thagida dhom, thagida dhom, thagida
Dhom, thakkida thakida dhom
Thakka thakkita thakka thakita thakka
Thakkita, thakida thakida dhom
Thakka thakkita thakka thakita thakka
Thakkita, thakida thakida dhom
Thakka thakkita thakka thakita thakka
Thakkita, thakida thakida dhaaam