தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்
தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்
தாயுன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்
அம்மா உன்ன பார்த்தா வார்த்த வர்ல மேலே
இப்போ உன்ன பார்த்தா பச்ச புள்ள போலே
தாலாட்டு பாட இங்கே ஆராரிராரோ
தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்
என்னை ஒரு பாரம் என்றா சுமந்து நீ காத்திருந்த
உனக்கு நான் பாரம் என்று எதுக்கு நீ தள்ளி வச்ச
சங்கிலியால் என்ன கட்டி வச்ச காலம் உண்டு
சங்கிலியால் நீயே கட்டிக்கொண்டா நியாயம் தான்
உன் மேலே என்ன் காயம் என் நெஞ்சில் வலி கூடும்
அன்பே ஒரு துன்பமா
தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்
அம்மா உன்ன பார்த்தா வார்த்த வர்ல மேலே
இப்போ உன்ன பார்த்தா பச்ச புள்ள போலே
தாலாட்டு பாட இங்கே ஆராரிராரோ
தொட்டிலிலே தூளி வைக்க உன் வயசு தோது இல்ல
உன்ன விட்டு ஒதுங்கவும் என் மனசு கேட்கவில்ல
பிள்ள பெத்த நோவ எந்த பிள்ள தீர்ப்பதுண்டு
அம்மா என்னும் பூவ பொத்தி காக்க நானும் உண்டு
அம்மா உந்தன் அம்மா வந்தாள் இங்கே அம்மா
பிள்ளை எந்தன் அன்பிலே
தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்
தாயும் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்
அம்மா உன்ன பார்த்தா வார்த்த வர்ல மேலே
இப்போ உன்ன பார்த்தா பச்ச புள்ள போலே
தாலாட்டு பாட இங்கே ஆராரிராரோ
தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்
தாயுன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்