கிலேச காதலா
உன்னை வியக்கிறேன்
நீ அருகினில் இருக்கையில்
ஓர் இறகென மிதக்கிறேன்
அதீத காதலால்
என்னை மறக்கிறேன்
நீ விரல்களை பிடிக்கையில்
என் துயரங்கள் தொலைக்கிறேன்
சேய் போல என்னை மாற்றினாயே
என் தாய் போல நீயும் மாறினாயே
உன் பார்வை போதும்
உன் வார்த்தை போதும்
என் வாழ்க்கையும் யாவும்
உன் மூச்சில் உயிர் வாழுமே
உன் வாழ்வு என்னோடு
என் வாழ்வு உன்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே
கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே
உன் நிழல்படும்
தொலைவினில் தினம்
வசிப்பது பேரின்பம்
சில நொடி சினம்
சிரிக்கையில் மனம்
உணர்ந்திடும் முன் ஜென்மம்
அணைப்பாயா
என் சொல் கேட்பாயா
என் ராட்சஸ
என் சில்மிஷா
வரம் நீயே
அன்பில் சிந்தும் கண்ணிர் போல
வைரம் இல்லை
உன் அருகில் வாழ்ந்தால்
நரகம் கூட துயரம் இல்லை
உன் வாழ்வு என்னோடு
என் வாழ்வு உன்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே
கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே