திரைப்படம்: "முத்தான முத்தல்லவோ" 1976;
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்;
பாடலாசிரியர்: கண்ணதாசன்;
பாடியவர்கள்: எம்.எஸ்.வி எஸ்.பி
நடிப்பு: ஜெய் கணேஷ், தேங்காய் சீனிவாசன்
எனக்கொரு காதலிஇருக்கின்றாள், அவள்
ஏழு சுவரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வாளை ஓசை
கீதம் அவளது வாளை ஓசை
நாதம் அவளது தமிழ் ஓசை
தமிழ் ஓ........சை
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு சுவரங்களில் சிரிக்கின்றாள்
(MSV ayya) பஞ்சமம் பேசும் பறவை இரண்டும்
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சணை போதும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக
இனிதாக......
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு சுவரங்களில் சிரிக்கின்றாள்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசை ஆகும் எந்நாளும்
வையகம் யாவும் என் PUGAL பேச
கைவசம் ஆகும் எதிர் காலம்
எதிர் கா.....லம்..................
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு சுவரங்களில் சிரிக்கின்றாள்
தேன் சுவை கிண்ணம் ஏந்திய வண்ணம்
நான் தரும் பாடல் அவள் தந்தால்
மோகனம் என்னும் வாகனம் மீ.....து
தேவதை போலே அவள் வந்தால்.......
AAAAAAA OOO.......
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு சுவரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வாளை ஓசை
நாதம் அவளது தமிழ் ஓசை
தமிழ் ஓ.......சை