பெண் : ஏன்னா நீங்க
சமத்தா இல்ல அசடா
சமத்தா இருந்தா
கொடுப்பேலாம் அசடா
இருந்தா மறுப்பேலாம்
ஆண் : ஏன்டி புதுசா
கேக்குற என்ன பார்த்து
பெண் : அடுத்தாத்து
அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத
கேட்டேளா ஏன்னா
பெண் : அடுத்தாத்து
அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத
கேட்டேளா
பெண் : அடிச்சாலும்
புடிச்சாலும் அவா
ஒன்னா சேர்ந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும்
அவா ஒன்னா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொன்னு
புடிச்சதுக்கொன்னு
பொடவய வாங்கிக்கிறா
பட்டு பொடவய வாங்கிக்கிறா
பெண் : அடுத்தாத்து
அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத
கேட்டேளா
ஆண் : அடுத்தாத்து
சங்கதியெல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம்
பாதி வாங்கறான்டி
பட்டூ
ஆண் : அடுத்தாத்து
சங்கதியெல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம்
பாதி வாங்கறான்டி
ஆண் : மூன்றெழுத மூணு
ஷோவும் பாத்தது நீதான்டி
மூன்றெழுத மூணு
ஷோவும் பாத்தது நீதான்டி
ஆண் : சினிமாவுக்கே
சம்பளம் போனா
புடவைக்கேதடி பட்டூ
புடவைக்கேதடி
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி
Song upload by
Basha
பெண் : உங்களுக்கு
தான் வாக்கப்பட்டு
என்னத்த கண்டா பட்டு
உங்களுக்கு தான்
வாக்கப்பட்டு என்னத்த
கண்டா பட்டு
ஆண் : பட்டு கிட்டு
பேரைச்சொல்ல
பொறந்திருக்கே ஒரு
லட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
பெண் : நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகைநட்டுண்டா நேக்கு
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகைநட்டுண்டா நேக்கு
பெண் : எட்டுக்கல்லு
பேசாரி போட்டா
எடுப்பாஇருக்கும் மூக்கு
எட்டுக்கல்லு பேசாரி போட்டா
எடுப்பாஇருக்கும் மூக்கு
ஆண் : சட்டியில் இருந்தா
ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
சட்டியில் இருந்தா
ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
பெண் : எப்போ இருந்தது
இப்போ வர்றதுக்கு
எதுக்கெடுத்தாலும்
சாக்கு ம்கும்
பெண் : அடுத்தாத்து
அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத
கேட்டேளா
ஆண் : ஏட்டிக்கு
போட்டி பேசாதடி
பட்டூ
பெண் : பேசினா
என்ன வைப்பேளா
ஒரு குட்டு
ஆண் : ஆத்திரம் வந்தா
பொல்லாதவன்டி கிட்டு
பெண் : என்னத்த செய்வேள்
ஆண் : சொன்னத செய்வேன்
பெண் : வேரென்ன செய்வேள்
ஆண் : அடக்கி வைப்பேன்
பெண் : அதுக்கும் மேலே
ஆண் : ம்ம்….. பல்ல
உடைப்பேன்
பெண் : ஆ…ஆ..ஆ.ஆ
அடுத்தாத்து அம்புஜத்தை
பாத்தேளா அவ ஆத்துக்காரன்
கொஞ்சுறத கேட்டேளா
ஆண் : பட்டூ அடுத்தாத்து
சங்கதியெல்லாம் நமக்கேன்டி
பட்டூ நமக்கேன்டி பட்டூ நமக்கேன்டி