menu-iconlogo
huatong
huatong
avatar

Punnakaiyil Minsaram - HQ -TRACK

ROMALDhuatong
🔥👊ROMALD👊🔥huatong
歌詞
作品
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : புன்னகையில் மின்சாரம்

பொங்க வரும் முத்தாரம்

அள்ளியெடுக்க

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்

கொண்டு வரும் தாம்பூலம்

கிள்ளியெடுக்க

ஆண் : ஆஹா……கண்ணன் துணை ராதே ராதே

கட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம்

ஜிகுஜிகு ஜம்ஜம்

ஆண் : புன்னகையில் மின்சாரம்

பொங்க வரும் முத்தாரம்

அள்ளியெடுக்க

ஆண் : மந்திரத்தை நான் பாட

அந்தரத்தில் நீயாட

சொர்க்கந்தான் மிகப் பக்கந்தான்

பெண் : முத்தளந்து நான் போட

முக்கனியை நீ தேட

மெல்லத்தான் இடை துள்ளத்தான்

ஆண் : வெப்பங்களும் தாளாமல்

தெப்பக்குளம் நீந்த

செங்கமலம் தானாக என்னை நெருங்க

பெண் : செங்கமலம் நோகாமல்

அன்புக்கரம் ஏந்த

சங்கமங்கள் தேனாகத் தித்திக்க

ஆண் : இன்பக் கதை நீ பாதி நான் பாதி

நாள்தோறும் சொல்லத்தான்

பெண் : இரு உள்ளங்களும் பூந்தேரின் மேலேறி

ஊர்கோலம் செல்லத்தான்

ஜிகுஜிகு ஜம்ஜம்……..

ஆண் : பரப்பப்ப

புன்னகையில் மின்சாரம்

பொங்க வரும் முத்தாரம்

அள்ளியெடுக்க

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்

கொண்டு வரும் தாம்பூலம்

கிள்ளியெடுக்க

ஆண் : ஆஹா……கண்ணன் துணை ராதே ராதே

கட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம்

ஜிகுஜிகு ஜம்ஜம்

ஆண் : புன்னகையில் மின்சாரம்

பொங்க வரும் முத்தாரம்

அள்ளியெடுக்க

பெண் : சொல்லியது மாளாது……

சொல்லிச் சொல்லித் தீராது

நித்தந்தான் ஒரு பித்தந்தான்

ஆண் : பொற்கலசம் மேலாட

பைங்கொடியும் போராட

அம்மம்மா……துயர் என்னம்மா

பெண் : வெண்ணிலவு போல் இந்தப்

பெண்ணிலவு தேய

வெட்கங்களைப் பார்க்காமல்

கட்டித் தழுவு

ஆண் : ஹா……பள்ளியறை ராஜாங்கம்

என்னவென்றுதானே

நள்ளிரவில் நீயாகச் சொல்லித் தா

பெண் : சொல்லித் தர நீ கேட்டுப் பாய் போட்டுத்

தேன் பாட்டுக் கேட்கத்தான்

ஆண் : சுகம் அள்ளித் தர எந்நாளும் வந்தாளே

கண்ணே என் கண்ணம்மா

ஜிகுஜிகு ஜம்ஜம்

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்

கொண்டு வரும் தாம்பூலம்

கிள்ளியெடுக்க

ஆண் : தர ரத் ததத்தா தத்தத் தத்தா

புன்னகையில் மின்சாரம்

பொங்க வரும் முத்தாரம்

அள்ளியெடுக்க

ஆண் : கண்ணன் துணை ராதே ராதே

கட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம்

ஜிகுஜிகு ஜம்ஜம்

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்

கொண்டு வரும் தாம்பூலம்

கிள்ளியெடுக்க

ஆண் : ……………………………………..

更多ROMALD熱歌

查看全部logo