menu-iconlogo
huatong
huatong
歌詞
作品
Male:அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே

அடங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே

போடவா தோப்புக்கரணம் போடவா நான்

பாடவா பாட்டுப் பாடி ஆட வா

அன்பு எனக்கு ரொம்ப இருக்கு

வம்பு வழக்கு இன்னும் எதுக்கு

அடங்கப்பனே அப்பனேபுள்ளையாரப்பனே

போடவா தோப்புக்கரணம் போடவா நான்

பாடவா பாட்டுப் பாடி ஆட வா

வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்

வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்

வேடிக்கை வித்தையெல்லாம் கத்துக்கிறேன்

வேறென்ன செய்ய வேண்டும் ஒத்துக்கிறேன்

இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன்

என்னை நானே விட்டு கொடுக்கிறேன்

சுட்டித்தனம் அத்தனையும் விட்டுவிடு ராஜா

அட அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே

போடவா தோப்புக்கரணம் போடவா

பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை

பாலகன் முருகனும் நல்ல பிள்ளை

நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டி பிள்ளை

தாங்கவில்லை நீ செய்யும் அன்பு தொல்லை

காட்டில் உன்னை கண்டு எடுத்தவன்

காதல் வைத்து உன்னை வளர்த்தவன்

உன்னைப்போல உள்ளம் உள்ள நல்ல பிள்ளை ராஜா

அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே

போடவா தோப்புக்கரணம் போடவா

ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள்

போகட்டும் முன்னம் செய்த தவறுகள்

தாயின்றி இந்த பிள்ளை தவிக்கிறேன்

நீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள்

பெத்த மனம் பித்து பிடித்தது

பிள்ளை நலம் எண்ணி கிடக்குது

அன்னை வசம் உன்னை வைப்பேன்

என்னை நம்பு ராஜா

அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே

போடவா தோப்புக்கரணம் போடவா நான்

பாடவா பாட்டுப் பாடி ஆட வா

அன்பு எனக்கு ரொம்ப இருக்கு

வம்பு வழக்கு இன்னும் எதுக்கு

அடங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே

போடவா தோப்புக்கரணம் போடவா நான்

பாடவா பாட்டுப் பாடி ஆட வா

更多S. P. Balasubrahmanyam/P. Susheela熱歌

查看全部logo