menu-iconlogo
logo

Laali Laali

logo
歌詞
சின்ன சின்ன கண்ணசைவில்

உன் அடிமை ஆகவா

செல்ல செல்ல முத்தங்களில்

உன் உயிரை வாங்கவா

லாளி லாளி நான் உன் தூளி தூளி

மெல்ல மெல்ல என்னுயிரில்

உன்னுயிரும் அசையுதே

துள்ள துள்ள என்னிதயம்

நம்முயிருள் நிறையுதே

லாளி லாளி நீ என் தூளி தூளி

உன்னை அள்ளி ஏந்தியே

ஒரு யுகம் போகவா

தலைமுதல் கால்வரை

பணிவிடை பார்க்கவா

லாளி லாளி நான் உன் தூளி தூளி

லாளி லாளி நீ என் தூளி தூளி

காலை அணைப்பின் வாசமும்

காதில் கிருங்கும் சுவாசமும்

சாகும் போதும் தீர்ந்திடாது வா உயிரே

காதில் உதைக்கும் பாதமும்

மார்பில் கிடக்கும் நேரமும்

வாழும் வரைக்கும்

தேய்ந்திடாது வா உயிரே

ஆணில் தாய்மை கருவாகும்

ஈரம் பூத்து மழையாகும்

கண்ணீர் சுகமாய் இமை மீறும்

காலம் உந்தன் வரமாகும்

சின்ன சின்ன கண்ணசைவில்

உன் அடிமை ஆகவா

செல்ல செல்ல முத்தங்களில்

உன் உயிரை வாங்கவா

லாளி லாளி நான் உன் தூளி தூளி

மெல்ல மெல்ல என்னுயிரில்

உன்னுயிரும் ஆசையுதே

துள்ள துள்ள என்னிதயம்

நம்முயிருள் நிறையுதே

லாளி லாளி நீ என் தூளி தூளி

என்னை அள்ளி ஏந்தியே

ஒரு யுகம் போகவா

தலைமுதல் கால்வரை

பணிவிடை பார்க்கவா

லாளி லாளி நீ என் தூளி தூளி

லாளி லாளி நீ என் தூளி தூளி

Laali Laali Sathyaprakash/Pragathi Guruprasad - 歌詞和翻唱