menu-iconlogo
huatong
huatong
avatar

Muruganai Koopittu

T. M. Soundararajanhuatong
scoobydoo101453huatong
歌詞
作品
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு

முற்றிய வினை தீருமே

முருகனைக் கூப்பிட்டு...

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு

முற்றிய வினை தீருமே

உடல் பற்றிய பிணி ஆறுமே

வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற

மெத்த இன்பம் சேருமே

அப்பன் முருகனைக் கூப்பிட்டு...

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு...

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு

குறைகள் யாவும் போகுமே

அவர் குடும்பம் தழைத் தோங்குமே

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு

குறைகள் யாவும் போகுமே

அவர் குடும்பம் தழைத் தோங்குமே

சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்

சகல பயம் நீங்குமே

ஐயன் முருகனைக் கூப்பிட்டு...

அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்...

முருகா

முருகா ஆ ஆ ஆ...

அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்

அருகில் ஓடி வருவான்

அன்பு பெருகி அருள் புரிவான்

அந்தக் கருணை உருவான குருபரன்

என்றுமே கைவிடாமல் ஆளுவான்

அப்பன் முருகனைக் கூப்பிட்டு...

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு...

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு

காரியம் கைகூடுமே

பகை மாறி உறவாடுமே

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு

காரியம் கைகூடுமே

பகை மாறி உறவாடுமே

சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி

மேன்மை உயர்வாகுமே

ஐயன் முருகனைக் கூப்பிட்டு...

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு

முற்றிய வினை தீருமே

முருகனைக் கூப்பிட்டு...

முருகா ஆ ஆ ஆ...

更多T. M. Soundararajan熱歌

查看全部logo