menu-iconlogo
logo

Oru Pennai Paarthu

logo
歌詞
ஒரு பெண்ணைப் பார்த்து

நிலவைப் பார்த்தேன்

நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து

மலரைப் பார்த்தேன்

மலரில் ஒளியில்லை

ஒரு பெண்ணைப் பார்த்து

நிலவைப் பார்த்தேன்

நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து

மலரைப் பார்த்தேன்

மலரில் ஒளியில்லை

அவளில்லாமல்

நானில்லை

நானில்லாமல்

அவளில்லை

அவளில்லாமல்

நானில்லை

நானில்லாமல்

அவளில்லை

லல லல்ல லல்லலா...

லல லல்ல லல்லலா...

இசை

பதிவேற்றம்:

கொடி மின்னல் போல்

ஒரு பார்வை

மானோ மீனோ

என்றிருந்தேன்

குயில் ஓசை போல்

ஒரு வார்த்தை

குழலோ யாழோ

என்றிருந்தேன்

இசை

கொடி மின்னல் போல்

ஒரு பார்வை

மானோ மீனோ

என்றிருந்தேன்

குயில் ஓசை போல்

ஒரு வார்த்தை

குழலோ யாழோ

என்றிருந்தேன்

நெஞ்சொடு

நெஞ்சை சேர்த்தாள்

தீயோடு

பஞ்சை சேர்த்தாள்

நெஞ்சொடு

நெஞ்சை சேர்த்தாள்

தீயோடு

பஞ்சை சேர்த்தாள்

இன்று காதல் ஏக்கம்

தந்தாள் சென்றாள்

நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப் பார்த்து

நிலவைப் பார்த்தேன்

நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து

மலரைப் பார்த்தேன்

மலரில் ஒளியில்லை

அவளில்லாமல்

நானில்லை

நானில்லாமல்

அவளில்லை

லல லல்ல லல்லலா...

இசை

பதிவேற்றம்:

கலை அன்னம் போலவள்

தோற்றம்

இடையில் இடையோ

கிடையாது

சிலை வண்ணம் போலவள்

தேகம்

இதழில் மதுவோ

குறையாது

இசை

கலை அன்னம் போலவள்

தோற்றம்

இடையில் இடையோ

கிடையாது

சிலை வண்ணம் போலவள்

தேகம்

இதழில் மதுவோ

குறையாது

என்னோடு தன்னை

சேர்த்தாள்

தன்னோடு என்னை

சேர்த்தாள்

என்னோடு தன்னை

சேர்த்தாள்

தன்னோடு என்னை

சேர்த்தாள்

இன்று காதல் ஏக்கம்

தந்தாள் சென்றாள்

நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப் பார்த்து

நிலவைப் பார்த்தேன்

நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து

மலரைப் பார்த்தேன்

மலரில் ஒளியில்லை

அவளில்லாமல்

நானில்லை

நானில்லாமல்

அவளில்லை

லல லல்ல லல்லலா..

லல லல்ல லல்லலா..

இசை

லல லல்ல லல்லலா..

நன்றி

பதிவேற்றம்:

Oru Pennai Paarthu T. M. Soundararajan - 歌詞和翻唱