ஆ : மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன
இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே
பெ : கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு கண்ணா –
என் காதலுக்கே
வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா
ஆ : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே நீ ஆட
பெ : பூவாடை வரும் மேனியிலே
உன் புன்னகை இதழ்கள் விளையாட
ஆ : கார்காலம் என விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட
கார்காலம் என விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட
பெ : கை வளையும் மை விழியும்
கட்டியணைத்து கவி பாட
ஆ : மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
ஆ : அன்னத்தைத் தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான்
தொட மாட்டேன்
பெ : கன்னத்தில் இருக்கும்
கிண்ணத்தை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன்
ஆ : உன்னையல்லால் ஒரு
பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட மாட்டேன் –
உன்னையல்லால் ஒரு
பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட மாட்டேன
பெ : உன் உள்ளம் இருப்பது
என்னிடமே அதை
உயிர் போனாலும் தர மாட்டேன்
ஆ : மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே
அன்புக் காணிக்கை தான் கண்ணே