menu-iconlogo
logo

Kadavul Yen Kallanan

logo
歌詞
கடவுள் ஏன் கல்லானான்

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

கடவுள் ஏன் கல்லானான்

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

கடவுள் ஏன் கல்லானான்

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்

அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்

அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்

இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்

இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்

இங்கு எல்லோர்க்கும்

நல்லவன் தன்னை இழந்தான்

எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்

கடவுள் ஏன் கல்லானான்

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி

அது நீதி தேவனின் அரசாட்சி

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி

அது நீதி தேவனின் அரசாட்சி

அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி

அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி

மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி

அரங்கத்தில் வராது அவன் சாட்சி

கடவுள் ஏன் கல்லானான்

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

சதி செயல் செய்தவன் புத்திசாலி

அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி

சதி செயல் செய்தவன் புத்திசாலி

அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி

உண்மையை சொல்பவன் சதிகாரன்

உண்மையை சொல்பவன் சதிகாரன்

இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்

இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்

கடவுள் ஏன் கல்லானான்

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

கடவுள் ஏன் கல்லானான்

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

Kadavul Yen Kallanan T.M.Soundararajan - 歌詞和翻唱