huatong
huatong
avatar

Vaa Vaa Idhayame

Spbhuatong
Arunna*huatong
الكلمات
التسجيلات
பெ: ஆ………..

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ…….

திரைப்படம்: நான் அடிமை இல்லை

இசை: விஜய் ஆனந்த்

பதிவேற்றம்: அருண்...

பெ: வா வா இதயமே

என் ஆகாயமே...

உனை நாளும் பிரியுமோ

இப் பூ மேகமே...

கடல் கூட வற்றிப்போகும்

கங்கை ஆறும் பாதை மாறும்

இந்த ராகம் என்றும் மாறுமோ...

வா வா இதயமே

என் ஆகாயமே...

பதிவேற்றம்: அருண்...

ஆ: தேவலோக பாரிஜாதம்

மண்ணில் வீழ்தல் என்ன நியாயம்

எந்தன் பாதம் முள்ளில் போகும்

மங்கை உந்தன் கால்கள் நோகும்

வான வீதியில் நீயும் தாரகை...

நீரில் ஆடும் நான்... காயும் தாமரை..

காதல் ஒன்றே ஜீவன் என்றால்

தியாகம் உந்தன் வாழ்க்கை என்றால்

ஏழை வாசல் தேடி வா...

வா வா இதயமே

என் ஆகாயமே...

உனை நாளும் வாழ்த்துமே...

இப் பூ மேகமே...

பதிவேற்றம்: அருண்...

பெ: வானவில்லும் வண்ணம் மாறும்

வெள்ளி வேரும் சாய்ந்து போகும்

திங்கள் கூட தேய்ந்து போகும்

உண்மை காதல் என்றும் வாழும்...

காற்று வீசினால், பூக்கள் சாயலாம்...

காதல் மாளிகை சாய்ந்து போகுமோ….

ராமன் பின்னே மங்கை சீதை

எந்தன் வாழ்வோ உந்தன் பாதை

காதல் மாலை சூட வா...

ஆ: வா வா இதயமே

என் ஆகாயமே...

பெ: உனை நாளும் பிரியுமோ

இப் பூ மேகமே...

ஆ: கடல் கூட... வற்றிப்போகும்

பெ: கங்கை ஆறும்... பாதை மாறும்

ஆ: இந்த ராகம் என்றும் மாறுமோ...

ஆ & பெ: வா வா இதயமே

என் ஆகாயமே...

பதிவேற்றம்: அருண்...நன்றி...

المزيد من Spb

عرض الجميعlogo